Tuesday, 22 October 2013

ரம்மி ஆடியோ ரைட்ஸ் - சோனி வாங்கியது

விஜய் சேதுபதியின் அடுத்த ‌ரிலீஸ் ரம்மியா, பண்ணையாரும் பத்மினியுமா என்ற கேள்விக்கு தனது பிரஸ்மீட்டில், ரம்மிதான் முதலில் வரும் என பதிலளித்தார் விஜய் சேதுபதி.

பொதுவாக ரஹ்மான், ஹா‌ரிஸ், யுவன் இசையமைத்த படங்களின் ஆடியோ உ‌ரிமையை மட்டுமே சோனி விரும்பி வாங்கும். ரம்மி எதிர்பார்ப்புக்கு‌ரிய படம் என்பதால் அதன் ஆடியோ ரைட்ஸை வாங்கியுள்ளது. டி.இமான் ரம்மிக்கு இசையமைத்துள்ளார்.

அக்டோபர் 25ஆம் தேதி ரம்மி பாடல்கள் வெளியிடப்படுகிறது.

ரம்மி கிராமப்புற கல்லூ‌ரியில் நடக்கும் கதை. விஜய் சேதுபதி, காயத்‌‌‌ரி (நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்) இனிகோ பிரபாகரன் நடித்துள்ளனர்.

நவம்ப‌ரில் படம் திரைக்கு வருகிறது.

No comments:

Post a Comment