Sunday, 27 October 2013

ஆரம்பத்துக்கு முன்பதிவு தொடங்கியது – தியேட்டர்களில் குவிந்த ரசிகர்கள்!!

தல ரசிகர்களுக்கு மட்டுமின்றி தமிழக மக்களுக்கும் தீபாவளி விருந்து படைக்க வருகிறது ஆரம்பம். வருகிற 31ந் தேதி உலகம் முழுவதும் ஆரம்பம், ஆரம்பம்.
அதற்கான முன்பதிவு இன்று (அக்டோபர் 26) தொடங்கியது. காலை பத்து மணிக்கு துவங்கிய முன்பதிவு மாலை 5 மணி வரை இருக்கும். சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் இதற்கென தனியாக கவுண்டர்கள் அமைத்திருக்கிறார்கள். காலை 8 மணிமுதலே ரசிகர்கள் முன்பதிவு கவுண்டர்களை மொய்க்க ஆரம்பித்து விட்டார்கள்.
தீபாவளி ஸ்பெஷல் டிரைய்ன் மாதிரி காலை 12 மணிக்குள் நவம்பர் 5ந் தேதி வரைக்கும் ரிசர்வேஷன் முடிந்து விட்டதாக தியேட்டர் மானேஜர்கள் தெரிவிக்கிறார்கள். சென்னை அடுத்த பிற நகரங்களிலும் இன்றே முன்பதிவு தொடங்கியது. அங்கும் ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் முன்பதிவு செய்து வருகிறார்கள்.
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மாயாஜாலில் இதுவரை 24 காட்சிகளுக்கு ஹவுஸ்புல் புக்கிங்க ஆகிவிட்டது. 31ந் தேதி அன்று மட்டும் 70 காட்சிகள் திரையிட திட்டமிட்டிருக்கிறார்கள். இதுதவிர பல மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கு ஆன்லைன் புக்கிங்கும் இன்று தொடங்கியது. சில புக்கிங் இணைய தளங்கள் இதற்கென்று தனி பக்கத்தை துவக்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment