நடிகைகள் தங்கள் மகள்களும் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டால் வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டாக வேண்டியதுதான். அப்படி ஆசைப்பட்டு வந்தவர்கள்தான் கார்த்திகாவும், துளசியும். வடக்கில் கொடிகட்டி பறந்த ஸ்ரீதேவிக்கு கூட தன் மகளை சினிமாவில் பெரிய நடிகையாக்கி பார்த்துவிடும் ஆசை இருக்கிறது. அதே ஆசை மகளுக்கும் இருக்கிறது. நல்ல இயக்குனருக்காக காத்திருக்கும் ஸ்ரீதேவியின் வாரிசு விரைவில் அதற்கான அறிவிப்பை நாட்டுக்கு அளிப்பார் என்று தெரிகிறது. இந்த நிலையில்தான் பரபரப்பான ஒரு பேச்சு கோடம்பாக்கத்தில் எழுந்திருக்கிறது. அர்ஜுனின் மகள் எப்படி ஆர்ப்பாட்டமாக அறிமுகம் ஆனாரோ, அதே அளவு ஆர்ப்பாட்டத்துடன் அறிமுகம் ஆகவிருக்கிறாராம் குஷ்வின் மூத்த மகள். ஆரம்பத்தில் இதற்கு ஒப்புக் கொள்ளாத குஷ்பு, மகளின் பிடிவாதத்திற்கும் ஆசைக்கும் தற்போது செவி சாய்த்திருப்பதாக கூறப்படுகிறது. அம்மாவின் புகழ், அவர் அம்மா நடிகை ஆன பிறகும் குறையவே இல்லை. மகள் அவரை விட தாண்டி வெற்றியை குவிக்க வேண்டும். அதுதான் பலரது ஆசையாக இருக்கிறது.
No comments:
Post a Comment