Tuesday, 22 October 2013

கதாநாயகி விஷயத்தில் தலையிடவே மாட்டேன் - விஜய் சேதுபதி பேட்டி

தொடர்ச்சியாக ஹிட்கள். என்றாலும் அதன் கனம் தலைக்கேறாத யதார்த்த்துடன் வளைய வருகிறார் விஜய் சேதுபதி.

கதையை, கேரக்டரை தவிர எதையும் பார்ப்பதில்லை என்ற இந்த அப் கமிங் ஹீரோவை டாப் லெவல் ஹீரோக்களும் உற்று கவனித்து வருகிறார்கள். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா வெற்றியைத் தொடர்ந்து பிரசாத் ஸ்டுடியோவில் பத்திரிக்கையாளர்களை விஜய் சேதுபதி சந்தித்தார். அவரின் பேட்டி.

ஏகப்பட்ட படங்களில் நடிக்கிறீங்க போலிருக்கு...?

ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், சங்குதேவன், வன்மம் அப்புறம் எஸ்.பி.ஜனநாதன் சார் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறேன். இதில் ரம்மி முதலில் வரும். பண்ணையாரும் பத்மினியும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. 


அனுபவமுள்ள பெரிய டைரக்டர்களின் படங்களில் ஏன் நடிப்பதில்லை?

ஜனநாதன் சார் பெரிய டைரக்டர்தானே? நான் பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணோம் படங்களில் நடிச்சுகிட்டிருந்த போது கேட்ட கதைகளில்தான் இப்போது நடிச்சுகிட்டிருக்கேன். அது முடியவே இன்னும் ஒன்றரை வருஷமாகும். அதுதான் உண்மையான காரணம். இனி வாய்ப்புகள் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன் 


அனுபவமுள்ள பெரிய டைரக்டர்களின் படங்களில் ஏன் நடிப்பதில்லை?

ஜனநாதன் சார் பெரிய டைரக்டர்தானே? நான் பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணோம் படங்களில் நடிச்சுகிட்டிருந்த போது கேட்ட கதைகளில்தான் இப்போது நடிச்சுகிட்டிருக்கேன். அது முடியவே இன்னும் ஒன்றரை வருஷமாகும். அதுதான் உண்மையான காரணம். இனி வாய்ப்புகள் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன்


எல்லா படங்களிலும் கதாநாயகிகளிடமிருந்து விலகியே இருக்கிறீர்களே, ஏன்?

நெருக்கமாக நடிக்கிறபடி கதை அமையவில்லை. பீட்சாவில் ஓரளவுக்கு காதல் காட்சிகள் இருந்தது. அது மாதிரி இனி கதை அமைந்தால் நெருக்கமாக நடிப்பதில் தப்பில்லை. 




ஒன்றுக்கு மேற்பட்ட ஹீரோக்களுடன் தொடர்ந்து நடிக்கிறீர்களே...?

கதைக்ககு தேவை என்றால் நிச்சயம் நடிப்பேன். விதார்த்துடன் ஒரு படம், ஆர்யாவுடன் ஒரு படம் என்று என்னுடைய அடுத்தடுத்த படங்கள் எல்லாம் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட்தான். நான் அதுக்கு எப்போதும் மறுப்பு சொன்னதில்லை. என்னுடைய கதாபாத்திரமும் கதையும் பிடித்திருந்தால் நிச்சயம் நடிப்பேன். 


கடா மீசையை எடுத்துவிட்டீர்களே..? 

மீசையில்லாமல் கொஞ்சம் இளமையாக இருப்பேன். சங்குதேவனின் மெச்சூர்டான கேரக்டர். அதனால் மீசை வைத்தேன். இப்போது சங்குதேவன் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருப்பதால் அதிகபடி மீசையை எடுத்துவிட்டேன்.

தயாரிப்பு ரொம்ப கஷ்டமான துறையாச்சே...? 


என்னை மாதிரியான ஆட்கள் சினிமாவில் வந்தது பெரிய விஷயம். அதனால படம் தயாரிப்பது பெரிய கஷ்டமாக தெரியலை. நாமளும் இந்த சினிமாவில்தானே இருக்கோம், அதையும் செய்து பார்ப்போமே என்று இறங்குனதுதான் தயாரிப்பு. அப்புறம் இதுல எல்லா வேலையும் நான் பார்க்கப் போறதில்லை. பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரிப்பது மட்டும்தான் என்னுடைய வேலை. அப்புறம் படத்தை விளம்பரப்படுத்தி ரிலீஸ் செய்வதுவரை ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் பார்த்துக் கொள்ளும்.




  

No comments:

Post a Comment