Thursday, 24 October 2013

ஆன்ரியாவுக்காக சிரிச்சுருங்க...

ஒரு நடிகரோ நடிகையோ காமெடி காட்சிகளில் ரசிகர்களை சிரிக்க வைத்துவிட்டால் அதுதான் அவர் வாழ்வில் முக்கியமான இடம். ஏனென்றால் நடிப்பு எளிதில் வாய்க்கப் பெறும் பல நடிகர் நடிகைகள் காமெடி என்று வரும்போது திண்டாடி திணறுவதை நாம் எளிதாக உணர முடியும். இருக்கறதிலேயே பெரிய கஷ்டம் காமெடி படம் இயக்குவதுதான் என்று இயக்குனர்கள் பலரும் பேட்டியளிப்பதை கவனித்திருப்பீர்கள். 
இந்த நிலையில்தான் அதிக ரிஸ்க் ஏரியாவான காமெடி பக்கம் கவனம் செலுத்தியிருக்கிறார் ஆன்ட்ரியா. சுந்தர்சி இயக்கி ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார். இன்னொரு முக்கியமான கேரக்டரில் ஆன்ரியாவும் நடிக்கிறார். இந்த கேரக்டர் முழுக்க முழுக்க காமெடி பண்ணுகிறதாம் படத்தில். சுந்தர்சி யின் தலையில் பாரத்தை போட்டுவிட்டு காமெடி பண்ண களம் இறங்கிவிட்டார் ஆன்ட்ரியா. அதுக்காக கோவை சரளா ரேஞ்சுக்கு போக மாட்டார் என்று இப்போதைக்கு நம்பலாம். 

No comments:

Post a Comment