இத்தனை காலம் கமுக்கமாக வைத்திருந்த தன் டைரக்ஷன் கனவை பற்றி இப்போதெல்லாம் அதிரடியாக மேடைகளில் பேச ஆரம்பித்துவிட்டார் விஷால். சினிமாவில் தயாரிப்பாளராகவும் அவர் வெற்றிபெறக் கூடிய காலம் இது. அது டைரக்ஷன்தான் என்று முடிவெடுத்திருக்கிறார் போலிருக்கிறது. இந்த தீபாவளிக்கு என்னோட பாண்டியநாடு வருது. படம் வருமா, வராதா? தயாரிப்பாளர்களின் பிரச்சனையில் என் படம் சிக்கலில் மாட்டிக்குமா என்கிற எந்த கவலையும் இப்போது எனக்கு இல்லை என்று கொண்டாட்டம் போடுகிறார் அவர். மதகஜராஜா கடைசி நேரத்தில் வராமல் போனதிலிருந்தே அவரால் இது போன்ற கடைசி நேர தடங்கல்களை தாங்கிக் கொள்ள முடியவில்லை. சரி போகட்டும்... இந்த டைரக்டர் அவதாரம் எப்போது? ரொம்ப சீக்கிரம் என்று அவர் சொன்னாலும் அதை நிறைவேற்ற அவர் எடுத்துக் கொள்ளும் முன் முயற்சிகளால் டைரக்டர் விஷாலை காண இன்னும் ஒரு வருடத்திற்கு மேலாகலாம். ஹாலிவுட் ஸ்டைலில் ப்ரி புரடக்ஷனுக்கே ஒரு வருஷம் எடுத்துக்க போறேன் என்று கூறிவிட்டார் அவர். திட்டம் தெளிவா இருக்கு. அப்புறம் என்ன? இப்பவே டைரக்டர் விஷால்னு அழைக்க ஆரம்பிச்சுடலாம்.
No comments:
Post a Comment