Friday, 25 October 2013

நயன்தாரா மேல ஒரு லைக்காம்


நான் கடவுள் ராஜேந்திரனை சின்னப்பசங்க பார்த்தால் பார்த்த இடத்திலேயே டவுசர் ஈரமாகிவிடுவது உறுதி. அப்படியொரு தோற்றம் அவருக்கு. ஆனால் அவரையே ராஜா ராணி படத்தில் காமெடியாக நடிக்க வைத்துவிட்டார் அட்லீ. இந்த படத்தில்தான் நயன்தாராவும் நடித்திருந்தார். ஆனால் இவருக்கும் நயன்தாராவுக்கும் படத்தில் எந்த காம்பினேஷன் ஷாட்டும் இல்லையாம். இதில் பார்ட்டி ரொம்பவே கவலை கொள்கிறார் போலிருக்கிறது. அண்மையில் ஒரு வார இதழுக்கு பேட்டியளித்திருந்த அவர், எனக்கு நயன்தாரான்னா ஒரு லைக் இருக்குப்பா. அவங்க கூட நடிக்கணும்னு ஆசையா இருக்கு என்று கூறியிருக்கிறார். இதை நயன்தாரா லைக் பண்ணுகிறாரோ இல்லையோ? ஃபேஸ்புக்கில் இந்த ஸ்டேட்டசை போட்டு ஆளாளுக்கு 'லைக்' கொடுக்கிறார்கள். அப்படியே ராஜேந்திரனை பற்றிய இன்னொரு செய்தி. சினிமாவில் ஸ்டண்ட் ஊழியராக பணியாற்றிய இவர் இப்போதெல்லாம் அந்த வேலையை பார்க்கவே முடிவதில்லை. ஏன் தெரியுமா? தினந்தோறும் இவருக்கு நடிக்க அழைப்புகள் வந்து கொண்டேயிருக்கிறதாம். இந்த புண்ணியம் பாலாவுக்குதான்.

No comments:

Post a Comment