இயக்குனர் ஷங்கர் தனது எஸ் பிக்சர்ஸ் மூலம் தனது இயக்கத்தில் முதல்வன் படத்தை தயாரித்தார். அதன்பிறகு மற்றவர்கள் இயக்கத்தில் காதல், வெயில், இம்சை அரசன் 23ம் புலிகேசி படங்களை தயாரித்தார். இவை அனைத்தும் ஹிட்டாகி அவருக்கு நல்ல லாபத்தைக் கொடுத்தது.அதன் பிறகு தயாரித்த அறை எண் 305ல் கடவுள், கல்லூரி, ஈரம், ரெட்டைச்சுழி, ஆனந்தபுரத்து வீடு ஆகிய படங்கள் தொடர்ச்சியாக தோல்வி அடைந்து அவருக்கு பெரும் நஷ்டத்தைக் கொடுத்தது. அதன்பிறகு படம் தயாரிப்பதை நிறுத்தி விட்டார். இப்போது அது பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது: “படத் தயாரிப்பில் எனக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டது உண்மை. சின்ன சின்ன அலட்சியங்கள் இணைந்து மெகா அலட்சியமாயிடுச்சு. சின்ன சின்ன நஷ்டங்கள் சேர்ந்து மெகா நஷ்டமாயிடுச்சு.
அதுலேருந்து வெளியில வரவே பெரிய போராட்டமாயிடுச்சு. பெரிய படங்கள் டைரக்ட் பண்றதால என்னால சொந்த தயாரிப்புல கவனம் செலுத்த முடியல. தயாரிப்பு வேலைகளை கவனிக்க சரியான ஆள் வேண்டும். அப்படி ஒரு ஆள் எனக்கு கிடைக்கவில்லை.
மூடர்கூடம் படம் நான் தயாரிக்க வேண்டியது முடியாமப்போச்சு, ராஜு முருகனின் குக்கூ கதை எனக்கு பிடிச்சிருந்தது. ஐ பட வேலைகள் காரணமா அதையும் மிஸ் பண்ணிட்டேன்.
சூதுகவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் மாதிரியான படங்களை தயாரிக்க முடியலையேங்ற வருத்தம் இருக்கு. ஆனாலும் அழகான, அர்த்தமுள்ள படங்களை தயாரிக்கிற ஆசை இருக்கு. வெயிட் பண்ணுங்க” என்கிறார் ஷங்கர்.
No comments:
Post a Comment