தொப்புள் நடிகை நஸ்ரியா ஏற்படுத்திய சர்ச்சை கோடம்பாக்கத்தை ஒரு உலுக்கு உலுக்கி விட்டது. தொப்புளில் பம்பரம் விட்டிருக்கிறோம். ஆப்பாயில் போட்டிருக்கிறோம். இப்படி எத்தனையோ சாதனைகளையெல்லாம் செய்திருக்கிறோம். அதற்கு நம்முடைய நடிகைகளும் முழு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட சினிமா உலகிற்கு வந்த இந்த நடிகை சாதாரண ஒரு டூப் தொப்புள் விசயத்தை பெரிய விவகாரமாக்கி விட்டாரே என்று நஸ்ரியாவை டோட்டல் கோலிவுட்டே கைகழுவி வருகிறது.
அதனால் நேரம் என்ற ஒரே படத்தோடு எந்த வேகத்தில் மார்க்கெட்டில் ஏறினாரோ அதே வேகத்தில் இப்போது இறங்கிக்கொண்டிருக்கிறார் நஸ்ரியா. குறிப்பாக, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் நடிக்கவும் இவரிடம்தான் பேசி வைத்திருந்தனர். ஆனால், நய்யாண்டியில் டூப் தொப்புளுக்கு கமிஷனர் ஆபீஸ் வரை அவரை ஏறி இறங்கிய விவகாரம் தெரிந்ததும் உடனடியாக அவரது பெயரை நீக்கி விட்டார்களாம்.
அவருக்குப்பதிலாக இப்போது சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டார். இந்த படத்தில் நடிக்க ஏற்கனவே சமந்தா தீவிர முயற்சியை எடுத்து வந்தபோதும், இரண்டு மனதாக இருந்து வந்த முருகதாஸ், நஸ்ரியா இல்லை என்று ஆனதும், ஒருமனதாக இப்போது சமந்தாவை புக் பண்ணி விட்டாராம்.
ஆக, கோடம்பாக்கத்தின் நயன்தாராக்களை துவம்சம் செய்து விட்டு நம்பர்ஒன் நாற்காலியில் உட்காருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நஸ்ரியா, கிரவுண்டுக்குள் வந்த வேகத்திலேயே ரன் அவுட்டாகி விட்டார்
No comments:
Post a Comment