இங்க என்ன சொல்லுது படத்தில் அப்பாடக்கர் என்ற பாடலை வைத்திருக்கிறார்கள். ரேடியோவை சரியாக டியூன் செய்யாத மாதிரி பேசும் விடிவி கணேஷ் நாயகனாக அறிமுகமாகும் படம்தான் இங்க என்ன சொல்லுது. இந்தப் படத்தை அவரே தயாரிக்கவும் செய்திருக்கிறார். படத்தின் ஹீரோயின் மீரா ஜாஸ்மின். சந்தானம் இன்னொரு ஹீரோ.
இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்பு, ஆண்ட்ரியா ஆகியோர் நடித்துள்ளனர். தரண் இசையமைத்துள்ளார். இந்தப் படத்துக்காக அப்பாடக்கர் எனத் தொடங்கும் பாடல் ஒன்றை அமைத்திருக்கிறார்கள்.
ராப் பாடலான இதனை பாடியிருப்பவர் ராப் பாடகர் ராபிட் மேக். நடனம் அமைத்தவர் ராபர்ட். இவைதவிர பாடலுக்கு ஆடியிருக்கிறார் சந்தானம். அதுவும் வளைந்து நெளிந்து செம ஆட்டம் போட்டிருப்பதாக யூனிட் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment