சிகரெட் காமெடிக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டோம். எனவேதான் அக்காட்சி நீக்கப்பட்டது என்றார் கார்த்தி.கார்த்தி, சந்தானம், காஜல் அகர்வால் நடித்திருக் கும் படம் ‘ஆல் இன் ஆல் அழகுராஜாÕ. ராஜேஷ் டைரக்டு செய்கிறார். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இதற்கிடையில் இப்படத்தின் டிரெய்லர் காட்சி ரிலீஸ் செய்யப்பட்டது. அதில் சினிமா தியேட்டர்களில் படம் போடுவதற்கு முன் திரையிடப்படும் புகைப்பிடித்தால் புற்றுநோய் வரும் என்ற விழிப்புணர்வு விளம்பரத்தை குறிப்பிட்டு சந்தானம் காமெடி வசனம் பேசுவதுபோல் காட்சி இடம் பெற்றிருந்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அக்காட்சி நீக்கப்பட்டது.
இது குறித்து கார்த்தி கூறும்போது, இயக்குனர் ராஜேஷுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். என்னுடைய அம்மாவை சிரிக்க வைப்பது ரொம்ப கஷ்டம். ஆனால் ராஜேஷ் இயக்கிய பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை பார்த்து அம்மா வாய்விட்டு சிரித்தார். ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தில் சிகரெட் பிடிக்கும் காட்சியே இருக்கக்கூடாது என்று ராஜேஷ் விரும்பினார். அதற்காகவே சிகரெட் பற்றிய காமெடியை சேர்த் தார். அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. மக்களின் அந்த உணர்வை எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது. எனவே குறிப்பிட்ட நகைச்சுவை காட்சி கட¢செய்யப்பட்டது என்றார்.
No comments:
Post a Comment