Tuesday, 29 October 2013

கிறிதுஸ்மஸ் கேக் தயாரித்த ரம்மி டீம்

சென்னையில் உள்ள கிரீன்பார்க் நட்சத்திர ஓட்டலில் பிரமாண்ட கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ரம்மி பட டீம் கலந்து கொண்டு கேக் தயாரிப்பில் ஈடுபட்டனர். விஜய்சேதுபதி, இனிகோ பிரபாகர், பிரசன்னா, அசோக், நடிகைகள் காயத்ரி, ஐஸ்வர்யா மற்றும் படத்தின் டெக்னீஷியன்கள் கலந்து கொண்டு கேக்கில் ஓயினை ஊற்றி போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். பின்பு கேக் நிபுணர்களிடம் கிறிஸ்துமஸ் கேக் எப்படி தயாராகிறது என்பதை கேட்டுத் தெரிந்து கொண்டனர். ஆனால் டேஸ்ட் இப்போது பார்க்க முடியாது ஊறவைத்து கிறிஸ்துமஸின் போதுதான் வெளியில் வரும் என்று சொல்லிவிட்டார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஓட்டலின் பொதுமேலாளர் சுதீப் சென்குப்தா செய்திருந்தார். கேக் பணியில் ஈடுபட்டவர்களுக்கு ஓட்டலின் சார்பில் சூப்பர் டின்னர் கொடுக்கப்பட்டது. விருந்தை "அருந்தி" மகிழ்ந்தார்கள்.

No comments:

Post a Comment