மாற்றான் படத்துக்கு பிறகு கே.வி.ஆனந்த் டைரக்ட் செய்யும் படம் அனேகன். தனுஷ், கார்த்திக், அம்ரியா நடிக்கிறர்கள். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி சகோதரர்கள் தயாரிக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக், ஓம் பிரகாஷ் கேமராமேன். படப்பிடிப்புகள் தொடங்கி நடந்து வருகிறது.அனேகன் என்றால் அனைத்தும் அறிந்தவன், புரிந்தவன், தெரிந்தவன் என்று பொருள். சங்க இலக்கியத்தில் இறைவனை அனேகன் என்பார்கள். இந்த படத்துக்கு பழங்கால சரத்திர படத்துக்கு வைப்பது போன்று கோட்டை போன்ற டைட்டில் லோகோ வைத்திருந்தார்கள். அதை வைத்தே விளம்பரம் செய்தார்கள்.
இப்போது அந்த லோகோ டிசைனை மாற்றி விட்டார்கள். தற்போது ஒரு மூக்கு கண்ணாடி அல்லது காரின் முன்பக்க ஹெட்லைட் வடிவில் லோகோ வெளியிட்டிருக்கிறார்கள். புதிதாக பார்ப்பவர்களால் அதனை படிக்க முடியாது. உற்றுக் கவனித்தால்தான் அனேகன் என்ற படிக்க முடியும்.
லோகோ மாற்றத்திற்கான காரணம் தெரியவில்லை. இந்த லோகோவும் முடிவானதல்ல; இதுவும் மறலாம் என்று படத் தரப்பு கூறுகிறது.
No comments:
Post a Comment