Friday, 20 December 2013

Veeram's Audio launched and First copy is ready

Veeram's Audio has been officially launched today as promised earlier. As in the case of previous Ajith films, Veeram's audio also got released in a low-key event in the office of the FM channel Radio Mirchi.
The songs of the film got leaked in the internet yesterday. However the team Veeram, is not shaked by this and everyone associated with the film is confident about the sales and reach of Music composer Devi Sriprasad's songs.
Director Siva has handed over the first copy of the film to its producers who are happy that the film has come out as a neat family entertainer which will work well at the box office.
The Technical crew of the film has also watched the film and everyone of them is confident about the success of the film that sees Tamannah pairing up with Ajith for the first time.

Tuesday, 17 December 2013

இனி நான் சாக்லேட்பாய் இல்லை! உரக்க சொல்லி வருகிறார் ஆர்யா!!

நான் கடவுள் படத்தில் நடித்தபோது ஆர்யாவின் சாக்லேட்பாய் இமேஜ் மாறுவதற்கான சூழ்நிலை நிலவியது. ஆனால், அதையடுத்து தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் நடித்து அவர் ரிஸ்க் எடுக்க தயாராக இல்லை. அதனால் அந்த இமேஜ் அவரை பெபிக்கால் போன்று விடாப்பிடியாக ஒட்டிக்கொண்டது.
ஆனால், சமீபகாலமாக என்ட்ரியாகும் சில இளவட்ட ஹீரோக்கள் ஓரிரு ஆண்டுகளிலேயே தங்களது இமேஜை மாற்றிக்கொள்ளும் முயற்சிகளில் இறங்குவதைப்பார்த்த ஆர்யாவுக்கும் இப்போது அந்த ஆர்வம் அதிகரித்து விட்டது. அதற்கான தருணத்தை பார்த்துக்கொண்டேயிருந்தவர், புறம்போக்கு, மீகாமன் படங்களில் கமிட்டானதில இருந்து இந்த படங்களுக்குப்பிறகு எனது சாக்லேட்பாய் இமேஜ் என்னைவிட்டு அடியோடு நீங்கி விடும் என்று நிம்மதி பெருமூச்சு விட்டு வருகிறார்.
அதோடு, அடுத்தடுத்து காதல், காமெடி கதைகளுடன் தன்னை முற்றுகையிட்ட டைரக்டர்களிடமும், பொண்ணுங்களை துரத்தி துரத்தி காதலிக்கிறது, காமெடி என்ற பேருல ரசிகர்களை வலுக்கட்டாயமாக ரசிச்சு கிக்சு மூட்ட நினைக்கிறது இதையெல்லாம் சட்டையை கழற்றுவது மாதிரி கழற்றி வைத்து விட்டேன். அதனால், இனிமேல் அதிரடியான ஆக்ரோசமான கதைகளை ரெடி பண்ணிக்கொண்டு என்னிடம் வாருங்கள் என்று திருப்பி அனுப்புகிறாராம்.
அதோடு, சில ஆக்சன் ஹீரோக்களை முன்வைத்து, இனி அவர்கள் பட்டியலில் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்றும் உரக்க சொல்லி வருகிறாராம் ஆர்யா

Monday, 16 December 2013

டிசம்பர் 20-ல் இசை ; ஜனவரி 10-ல் படம் – வீரம் ரிலீஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அஜீத் குமார் நடிக்க விஜயா புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் திருமதி பாரதி ரெட்டி மற்றும் திரு வெங்கட்ராம ரெட்டி தயாரிக்க, சிவாவின் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்க மிக பிரம்மாண்டமாக தயாராகும் வீரம் படத்தின் இசை இம்மாதம் 20ஆம் தேதி வெளியாகிறது.
ஜுங்கலீ மியூசிக் இசை நிறுவனம், படத்தின் இசையை வெளியிட உள்ளது. படம் ஜனவரி 10ம் தேதி ரிலீஸாகிறது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அஜீத் குமாருடன் தமன்னா இணைந்து நடிக்கும் இந்த படத்தில் அவருடன் நாசர்,அதுல் குல்கர்னி, ரமேஷ் கண்ணா, விதார்த், பாலா, சந்தானம் , முனீஸ் , சுஹைல் ,தம்பி ராமையா, அப்பு குட்டி , மயில் சாமி, சுமித்ரா, சுஜாதா, ரோஹினி அட்டங்காடி , அபிநயா, மனோ சித்ரா, சூசாகுமார், தேவதர்ஷினி ,வித்யு லேகா, என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளது .
அஜீத் ரசிகர்களை கவரும் வண்ணம் மாஸ் பாடல்களை தேவிஸ்ரீ பிரசாத் வழங்கி உள்ளார் , அவரது இசை பயணத்தில் இந்த படம் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்று இயக்குனர் சிவா நம்பிக்கை தெரிவித்தார்.
ஜனவரி 10ஆம் தேதி உலகெங்கும் வெளி வரும் வீரம் படம், பாடல்களில் மட்டுமின்றி , கதை அமைப்பிலும், காட்சி அமைப்பிலும் மிக பிரம்மாண்டமாக , ஜனரஞ்சகமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
வெற்றியின் ஒளிப்பதிவில், மிலனின் கலை வண்ணத்தில், காசி விஸ்வநாதனின் பட தொகுப்பில், செல்வாவின் சண்டை காட்சி அமைப்பில், தினேஷ் நடனம் அமைக்க , விவேகா பாடல் வரிகளுக்கு , தேவி ஸ்ரீ பிரசாத் பட்டையை கிளப்பும் இசையை தந்துள்ளார் .
தலயின் பொங்கல் விருந்து ரெடி….!!

சிறந்த இந்தியர் விருது: தமிழ் மக்களுக்கு சமர்ப்பித்த ரஜினி!

என்.டி.டி.வி. சேனல் தொடங்கி 25 ஆண்டுகள் ஆனதையொட்டி, இணையத்தில் 'இந்தியாவின் 25 சிறந்த உலகளாவிய வாழும் சாதனையாளர்கள்' (INDIA's 25 GREATEST GLOBAL LIVING LEGENDS) என்ற கருத்துக் கணிப்பை நடத்தியது,
அக்கருத்து கணிப்பில் மிகச் சிறந்த 25 இந்தியர்களை மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்தனர். இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
அதில், அமிதாப்பச்சன், ஷாருக்கான், ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர், வகீதா ரகுமான் உள்ளிட்ட 25 பேர் இடம்பெற்றனர். அவர்கள் அனைவருக்கும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கி கெளரவித்தார்.
'மிகச் சிறந்த இந்தியர்' என்ற விருதைப் பெற்றுக்கொண்டு ரஜினிகாந்த் பேசியது, "பலர் அதிசயங்கள் ஏற்படுவதை நம்ப மாட்டார்கள். எப்போதாவது அதிசயங்கள் நடந்து கொண்டுதானிருக்கும். ஒரு சாதராண பஸ் கண்டக்டராக இருந்த நான், இவ்வளவு பெரிய சாதனையாளர்களின் நடுவில் இருக்கிறேன் என்பது அதிசயம்தான்.
இந்த விருதை எனக்கு தாயும் தந்தையுமாக இருக்கும் என் அண்ணன் சத்யநாராயணா கெய்க்வாட், எனது குரு கே.பாலச்சந்தர், தமிழ் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன். அவர்களது அன்பும், ஆதரவும் இல்லாமல் நான் இந்தளவிற்கு வந்திருக்க முடியாது" என்றார்.

இசை வெளியீடு : வீரம் Vs ஜில்லா

'வீரம்' படத்தின் இசை டிசம்பர் 20ம் தேதியும், 'ஜில்லா' படத்தின் இசை டிசம்பர் 21ம் தேதியும் வெளியாகும் என அறிவிப்பு.
அஜித்தின் 'வீரம்', விஜய்யின் 'ஜில்லா' ஆகிய படங்கள் ஜனவரி 10, 2014ல் வெளியாகும் என அறிவித்து அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இரண்டு படங்களுக்கான விளம்பரப்படுத்தும் பணிகளும் இசை வெளியீட்டில் இருந்து ஆரம்பிக்கும் என ரசிகர்களும் காத்திருந்தார்கள். இதனால் இசை வெளியீடு எப்போது என்று ஆர்வத்துடன் எதிர்நோக்கி இருந்தார்கள்.
'ஜில்லா' படத்தின் இசை டிசம்பர் 21ம் தேதி வெளியாகும் என்று 'ஜித்தன்' ரமேஷ் தனது ட்விட்டர் தளத்தில் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து 'வீரம்' படத்தின் இசை வெளியீடு எப்போது என்று அஜித் ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்தார்கள்.
இந்நிலையில், அஜித்தின் 'வீரம்' இசை டிசம்பர் 20ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள். பாக்ஸ் ஆபிஸில் ஒரே நாளில் வெளியாக இருக்கும் இரண்டு படங்களின் இசையும், ஒரு நாள் இடைவெளியில் வெளியாக இருக்கிறது.
'வீரம்' படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத்தும், 'ஜில்லா' படத்திற்கு இமானும் இசையமைத்து இருக்கிறார்கள். 'வீரம்' படத்தின் இசையை ஜிங்கிள் நிறுவனமும், 'ஜில்லா' படத்தின் இசையை ஸ்டார் மியூசிக் நிறுவனமும் வெளியிட இருக்கின்றன.

இயக்குநர் வெங்கட் பிரபு மீது நடிகை சோனா புகார்

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இயக்குநர் வெங்கட்பிரபு மீது நடிகை சோனா புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில், இயக்குநர் வெங்கட்பிரபு படம் இயக்கித் தருவதாக கூறி ரூ.1.5 கோடி பணத்தை தன்னிடம் இருந்து வாங்கியி ருப்பதாகவும், கடந்த 4 ஆண்டுகளாக அதை திரும்பி தராமல் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தி இந்துவிடம் நடிகை சோனா கூறியதாவது:
வெங்கட்பிரபுவின் ‘கோவா’ படம் முடிந்த கையோடு அடுத்து எனக்கு ஒரு படம் இயக்கித்தருவதாக ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் இதுவரை அதற்கான வேலை எதுவும் நடக்கவில்லை. அதிலிருந்து பல முறை அவரிடம் பணத்தை திரும்பக் கேட்டுள்ளேன். ஆனால் அவரோ ரூ. 50 ஆயிரமும், 1 லட்சமும் கொடுத்து அனுப்பிவிடுகிறார்.
கடந்த 4 ஆண்டுகளாக தராமல் இருக்கும் அந்த தொகையை அவர் திருப்பித் தர ஏற்பாடு செய்யுமாறு நடிகர் சங்கத்தில் மூன்று நாட்களுக்கு முன் புகார் கொடுத்திருந்தேன். சனிக்கிழமையன்று (இன்று) இரு தரப்பினரையும் வர வழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதாக நடிகர் சங்கத்தில் கூறியிருக் கிறார்கள். வெங்கட்பிரபு இயக்கத்தில் விரைவில் ‘பிரியாணி’ திரைப்படம் வெளிவரவுள்ளது. அதற்கு முன்பாக என் பணத்தை திரும்பத்தருமாறு கேட்டிருக்கிறேன்
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகை சோனா, வெங்கட்பிரபுவின் நெருங்கிய நண்பரும், பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகனுமான சரண் மீது ஏற்கனவே பாலியல் புகார் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் தன்னடக்கம் வியக்கவைக்கிறது: சச்சின் சிலாகிப்பு

நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், அவரது தன்னடக்கம் தன்னை வியக்கவைத்தாக சிலாகித்துக் கூறினார்.
என்.டி.டி.வி விருது வழங்கும் விழாவில் ரஜினியும் சச்சினும் சந்தித்துப் பேசினர்.
ரஜினியுடனான சந்திப்பு குறித்து என்.டி.டி.வி.க்கு சச்சின் அளித்த பேட்டியில், "அவர் வந்து என்னை சந்தித்தது ஒரு நெகிழ்வான விஷயம். அவருடைய பணிவும் தன்னடக்கமும் என்னை வியக்க வைத்தது. நான் பின்பற்றும் பல நபர்களுள் ரஜினியும் ஒருவர்.
ரஜினியும் ஒரு கிரிக்கெட் ஆர்வலர் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ந்தேன். தொடர்ச்சியாக அவர் கிரிக்கெட் விளையாட்டை ரசித்து வருவது மிகவும் மகிழ்ச்சி. பல்வேறு கிரிக்கெட் போட்டிகளை குறித்து பேசினோம். குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் குறித்து நிறைய பேசினோம்" என்றார் சச்சின்.

2014ல் ஐந்து படங்கள் புதிய வேகத்தில் சிம்பு

சிம்புவைப் பொறுத்தவரை 2013 சரியில்லாத ஆண்டு. 2012ல் வெளியான 'போடா போடி' படத்தினைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் 2013ல் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை. ‘வாலு’, ‘வேட்டை மன்னன்’ ஆகிய படங்கள் தயாரிப்பில் இருந்தாலும், எப்போது வெளியாகும் என்பது தெரியாமல் இருந்து வந்தது. சிம்புவை வைத்து படமெடுத்தால் அது அத்தனை சீக்கிரத்தில் முடியாது என்ற பேச்சு கோலிவுட்டில் பரவும் நிலையும் ஏற்பட்டது. ஆனால் இந்த சறுக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முழு வேகத்துடன் தயாராகி விட்டார் சிம்பு.
2014ல் முதலில் ‘வாலு’, ‘இங்க என்ன சொல்லுது’ (கெஸ்ட் ரோல்), பாண்டிராஜ் இயக்கும் படம், கெளதம் மேனன் இயக்கும் படம், செல்வராகவன் இயக்கும் படம் என்று அடுத்த ஆண்டில் ரவுண்டு கட்டி அடிக்க அவர் திட்டம் தீட்டியுள்ளார். இது அவரது ரசிகர்களையும் உற்சாகப் படுத்தியுள்ளது.
சிம்புவின் இந்தப் பட வரிசையில் 2012 தீபாவளி வெளியீடு என்று அறிவிக்கப்பட படமான ‘வாலு’ தற்போது தான் இறுதிகட்டத்தை எட்டி இருக்கிறது. முன்னணி நடிகர்களின் கால்ஷீட் பிரச்சினைகள் என பல்வேறு காரணங்களால் தாமதம் ஆன படத்தில் தற்போது இரண்டு பாடல்கள் மட்டுமே பாக்கி. அதனை முடித்து விட்டு சிம்பு பிறந்த நாளன்று ( பிப்ரவரி 3) படத்தினை வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. ‘வேட்டை மன்னன்’ படத்தின் நிலைமை மட்டும் புரியாத புதிராக இருக்கிறது.
சிம்பு அடுத்ததாக கவனம் செலுத்துவது பாண்டிராஜ் இயக்கும் படம். சிம்புவே தயாரிக்கும் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டிசம்பர் 20ம் தேதி முதல் தொடங்குகிறது. சிம்புவிற்கு ஜோடியாக இப்படத்தில் நயன்தாரா நடிப்பதால் விநியோகஸ்தர்கள் இடையே இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போதே கௌதம் மேனனின் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார் சிம்பு. பல்லவி சுபாஷ் நாயகி, ஏ.ஆர்.ரஹ்மான் இசை என இப்படத்திற்கும் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது. ‘விண்ணைத்தாண்டி வருவாயா' கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால், இப்படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா 2' என்று செய்திகள் பரவியது. ஆனால் இப்படம் ஒரு காதல், ஆக் ஷன் கலந்த கதை. ‘விண்ணைத்தாண்டி வருவாயா 2' அல்ல என்று அறிவித்தது படக்குழு.
கெளதம் மேனன், பாண்டிராஜ் என இருவரது படங்களிலும் மாறி மாறி நடித்து வரும் சிம்பு, செல்வராகவன் படத்தில் நடிக்க ஒப்பந்தமானது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ‘இரண்டாம் உலகம்’ படத்தின் தோல்வியில் இருந்த செல்வராகவன், சிம்புவை சந்தித்து கதை ஒன்றை கூறவே, உடனே அதில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் சிம்பு. இப்படத்தை ராடியன்ஸ் மீடியா நிறுவனத்தின் வருண் மணியன் தயாரிக்க இருக்கிறார். பிப்ரவரி 2014 முதல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. இப்படத்திற்கு யுவன் இசையமைப்பார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. படங்கள் ஒருபுறம் இருக்க 2014ல் ‘லவ் ஆன்தம்’ என்ற ஆல்பத்தையும் வெளியிட சிம்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2014ல் தொடர்ச்சியாக சிம்பு படங்கள் வெளிவர இருப்பதால், அவரது ரசிகர்கள் ட்விட்டர் தளத்தில் சிம்புவிற்கு வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். மொத்தத்தில் தன்னைப் பற்றிய வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து 2014ம் ஆண்டு தன்னுடையது என்ற உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறார் சிம்பு.

இவன் வேற மாதிரி - விமர்சனம்

பெரும்பாலான இயக்குநர்கள் தங்களுடைய முதல் படத்திலேயே மொத்தத் திறமையையும் காண்பித்துவிட்டு இரண்டாவது படத்தில் ஏமாற்றி விடுவார்கள். நல்லவேளையாக சரவணன் ரசிகர்களை ஏமாற்றவில்லை. அவரது முதல் படமான ‘எங்கேயும் எப்போதும்’ போல சமூக விழிப்புணர்வுப் படமில்லை ‘இவன் வேற மாதிரி’. முழுமையான வணிகத் திரைப்படம். முதல் படத்துக்கும் இரண்டாவது படத்துக்கும் இடையே நான் வேற மாதிரி என்று காண்பித்திருக்கிறார் இயக்குநர்.
சட்டக் கல்லூரி பிரச்சினையில் படம் ஆரம்பிக்கிறது. இந்தப் பிரச்சினைக்குக் காரணகர்த்தா சட்ட அமைச்சர். ஜெயிலில் இருக்கும் சட்ட அமைச்சரின் தம்பியான வம்சி ஒரு அரசியல் கொலை செய்ய பரோலில் வருகிறார். அவரை விக்ரம் பிரபு கடத்தி யாரும் இல்லாத இடத்தில் அடைத்துவிடுகிறார். ஜெயிலுக்குச் செல்ல வேண்டிய கெடு முடிகிறது.
பிரச்சினை பெரிதாக உருவெடுக்க சட்ட அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டிவருகிறது. கடத்தி வைத்திருக்கும் தம்பியை விக்ரம் பிரபு விடுவிக்க, விக்ரம் பிரபுவை வம்சி பழிதீர்த்தாரா என்பதுதான் த்ரில்லிங்கான இரண்டாம் பாதி.
இடையில் காதல் அத்தியாயமும் உண்டு. இரண்டரை மணிநேரப் படத்தை ஆக்ரமிப்பது சரவணனின் திரைக்கதையும் வசனங்களும்தான். ஒரு சிறிய க்ளூவை வைத்து யார் கடத்தியது என்று கண்டுபிடிக்கும் எபிசோட் பிரமாதம். “எனக்கு 22 வருட அனுபவம்,’’ “இல்லை நீங்க 22 வருஷ பழைய ஆள்”, “நான் இன்னும் சாகல, நாளைக்கு வா” என வசனங்களால் விளையாடியிருக்கிறார் சரவணன்.
முதல் பத்து நிமிடங்கள் அதிக வசனம் இல்லாமல் பின்னணி இசையில் மட்டுமே படம் பயணிக்கிறது. சட்டக் கல்லூரி கலவரத்தின் காட்சிகளைத் தொலைக்காட்சியில் பார்த்தபடியே மீள்பதிவு செய்திருக்கிறார். ஒளிப்பதிவும், சண்டைக் காட்சிகளும் திரைக்கதைக்குப் பக்கபலமாக இருக்கின்றன. ஆக்‌ஷன் - த்ரில்லர் படத்துக்கான பதற்றத்தையும் வேகத்தையும் இவர்கள் கச்சிதமாகக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
பிச்சைக்காரர்களுக்குச் சாப்பாடு போடுவது, துணிமணி எடுத்துக்கொடுப்பது ஆகிய கிளிஷேக்கள் உள்ளன. வலிந்து திணிக்கப்பட்ட காதல் காட்சிகளும் இருக்கின்றன. கைது செய்ய வரும் போலீஸைக் கொலை செய்வதில் கொஞ்சமும் லாஜிக் இல்லை.
கதை என்று பார்த்தால் புதிதாக எதுவும் இல்லை. நிஜ வாழ்வில் சட்டக் கல்லூரியில் நடந்த கலவரத்துக்குப் பின்னணி சாதி வெறி. இயக்குநர் அந்தக் கலவரத்தைத் தொட்டுக்கொள்கிறார். ஆனால் சாதியை விட்டுவிடுகிறார். தமிழ் சினிமாவின் நிரந்தர வில்லன்களில் ஒருவரான கெட்ட அரசியல்வாதியை வைத்துக் கதையை நகர்த்துகிறார்.
இத்தகைய குறைகளை மீறி இரண்டரை மணி நேரம் இயக்குனர் நம்மைக் கட்டிப் போடுகிறார். அதற்காகவே அவரைப் பாராட்டலாம்.

Sunday, 15 December 2013

பிச்சைக்காரன் என்று நினைத்து ரஜினிகாந்துக்கு 10 ரூபாய் தர்மம் செய்த பெண்

ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களை தொகுத்து பிரபல கண் டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த் ஓர் புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அந்த புத்தகத்தில் ரஜினிகாந்த சந்தித்த ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தை அவர் பதிவு செய்துள்ளார்.
பெங்களூரில் உள்ள பிரசித்தி பெற்ற கோயிலுக்கு குஜராத்தை சேர்ந்த ஒரு பெண்மணி தரிசனத்துக்காக வந்திருந்தார்.
கோயில் தூணின் ஓரமாக சாய்ந்து அமர்ந்திருந்த ஒருவரின் தோற்றத்தை கண்டு இரக்கப்பட்ட அந்த பெண் தனது கைப்பையில் இருந்து 10 ரூபாயை எடுத்து அவருக்கு தர்மமாக போட்டார்.
எப்போதும் போல் எளிமையான உடையில் தரிசனத்துக்காக வந்து தூணின் மேல் சாய்ந்து அமர்ந்திருந்த ரஜினிகாந்துக்கு அந்த பெண்ணின் செயல் அதிர்ச்சியை அளித்தது. இருப்பினும், அதை வெளிப்படுத்திக்கொள்ளாத ரஜினிகாந்த் அந்த 10 ரூபாயை வாங்கிக்கொண்டு அமைதியாக கோயிலுக்குள் சென்றார்.
சிறுது நேரம் கழித்து தரிசனம் முடிந்ததும் தனது காரை நோக்கி தனக்கே உரித்தான மிடுக்கான நடையில் அவர் சென்றபோது அவரை அடையாளம் கண்டுகொண்ட அந்த பெண் நடந்த தவறுக்காக ரஜினிகாந்திடம் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார்.
அந்த சம்பவத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்று கூறிய ரஜினிகாந்த், சற்றும் அலட்டிக்கொள்ளாமல் அந்த பெண்ணிடம் சாவகாசமாக சொன்னார்.. ‘அம்மா, என்னுடைய நிரந்தரமான இடம் எதுன்னு அப்பப்போ..
கடவுள் எனக்கு நினைவுப்படுத்திக்கிட்டே இருப்பாரு. இப்ப.. உங்க மூலமா எனக்கு 10 ரூபாய் பிச்சை போட்டு மறுபடியும் நான் சூப்பர் ஸ்டார் இல்லைன்னுற உண்மையை எனக்கு அவர் உணர்த்தி இருக்காரு’ என்று ரஜினிகாந்த் சாந்தமாக பதில் அளித்ததாக டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த் அந்த புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

எந்த படத்துக்கும் 3 நாட்களுக்குமேல் இசை அமைத்ததில்லை: இளையராஜா சவால்

இன்றைய இளம் இசை அமைப்பாளர்களுக்கு ஒரு பாட்டுக்கு மெட்டு வரவேண்டும் என்றால் கேரளாவின் படகுவீட்டுக்கு போக வேண்டும் அல்லது வெளிநாட்டு பனிமலைகளுக்கு செல்ல வேண்டும்.
குறிப்பாக ஹாரிஸ் ஜெயராஜ், நேற்று வந்த அனிருத் இவர்களுக்கெல்லாம் படத்துக்கு மியூசிக் போட வேண்டும் என்றால் கடல் கடந்து சென்றால்தான் முடியும். கோடிக் கணக்கில் சம்பளத்தையும் கொடுத்துவிட்டு தயாரிப்பாளர் இதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
இசை என்பது ரசித்து செய்ய வேண்டிய ஒன்று நான் ஒரு படத்துக்கு பின்னணி இசை அமைக்க நான்கு மாதங்கள் வரை எடுத்துக் கொள்வேன் என்று அண்மையில் ஹாரிஸ் ஜெயராஜ் கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக நேற்று (டிசம்பர் 14) நடந்த ஒரு ஊர்ல என்ற படத்தின் ஆடியோ விழாவில் இளையராஜா பேசினார். அதன் சுருக்கம் இது…
நான் எப்போதுமே புதியவர்களுக்கு நிறைய வாய்ப்பு கொடுப்பேன். அப்படித்தான் இந்தப் படத்தின் தயாரிப்பாளரும், டைரக்டரும் என்னிடம் வந்தார்கள். படத்தை எடுத்து முடித்திருந்தார்கள். படத்தை பார்த்துவிட்டு அது பிடித்திருந்ததால் இசை அமைக்க ஒப்புக்கொண்டேன்.
இரண்டே நாளில் இசை அமைத்து படத்தை அவர்கள் கையில் கொடுத்து விட்டேன்.
இந்தப் படம் மட்டுமல்ல எந்தப் படத்துக்கும் பின்னணி இசை அமைக்க நான் மூன்று நாட்களுக்கு மேல் எடுத்துக் கொண்டதில்லை. சில்வர் ஜூப்ளி படமாக இருந்தாலும் சரி, 100 நாள் ஓடிய படமாக இருந்தாலும் சரி என் தியேட்டரில் இருப்பது இரண்டு அல்லது மூன்று நாட்கள்தான்.
அந்தக் காலத்திலேயே புதியவர்களுக்கு இசை அமைத்திருக்கிறேன். என் பெயர் அவர்களுக்கு பயன்பட்டிருக்கிறது. இப்போதும் அமைத்துக் கொடுக்கிறேன். சிலர் அவர்கள் படத்துக்கெல்லாம் இசை அமைக்கிறீர்களே என்பார்கள்.
நான் இசை அமைத்து நீ பெரிய ஆளா வந்த மாதிரி அவரும் வந்துவிட்டு போகட்டுமே என்பேன். உணக்கான இடம் உனக்கு அவருக்கான இடம் அவருக்கு என்று சொல்லிவிடுவேன்.
இப்போதும் புதியவர்களே தைரியமாக வாருங்கள் நான் இருக்கிறேன்.
இவ்வாறு இளையராஜா பேசினார்.

கே.பாலச்சந்தருடன் அமீர்கான் சந்திப்பு: தமிழ் படங்களை ரீமேக் பண்ணுவது பற்றி பேச்சு

சென்னையில் நடந்து வரும் 11வது சர்வதேச திரைப்பட விழாவை துவக்கி வைக்க அவரது சொந்த செலவில் சென்னை வந்திருந்த இந்தி இளம் சூப்பர் ஸ்டார் அமீர்கான் நேற்று தமிழ் நாட்டின் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.
30 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் இருவரும் சினிமாவின் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்கள்.
அமீர்கானின் சத்யமே ஜெயதேவ் தொலைக்காட்சி நிகழ்ச்சி பற்றியும், அவரது கஜினி, 3 இடியட்ஸ், தூம் 3 படங்கள் பற்றியும் பாலச்சந்தர் பாராட்டி பேசினார். பாலச்சந்தரின் பல படங்கள் பற்றி அமீர்கான் சிலாகித்து பேசினார். தமிழில் பாலச்சந்தர் இயக்கிய படங்களை இந்தியில் ரீமேக் செய்வது பற்றியும் அமீர்கான் பாலச்சந்தருடன் பேசியதாக தெரிகிறது.
இன்றைக்குள்ள சூழ்நிலையில் உன்னால் முடியும் தம்பியை இந்தியில் ரீமேக் செய்து அதில் கமல் நடித்த கேரக்டரில் அமீர்கான் நடித்தால் நன்றாக இருக்கும் என்று பாலச்சந்தர் அவரிடம் கருத்து சொன்னதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பரிசீலிப்பதாகவும் அமீர்கான் தெரிவித்துள்ளார். வருகிற 19ம் தேதி நடக்க இருக்கும் தூம் 3யின் பிரிமியர் ஷோவுக்கு வருமாறு கே.பாலச்சந்தருக்கு அமீர்கான் அழைப்பு விடுத்துள்ளார்.

மிகச்சிறந்த இந்தியர் விருது: தமிழ் மக்களுக்கு அர்ப்பணித்து ரஜினி நெகிழ்ச்சி

பிரபல செய்தி சேனலான என்டிடிவி தொடங்கி 25 ஆண்டுகள் ஆகிறது. தனது வெள்ளிவிழாவையட்டி அந்த சேனல் தனது நேயர்களிடம் நடத்திய கருத்து கணிப்பின் அடிப்படையில் 25 பேரை மிகச்சிறந்த இந்தியர்களாக தேர்ந்தெடுத்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். நேற்று மாலை நடந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சிறந்த இந்தியர்களுக்கு விருது வழங்கினார்.
விருதை பெற்றுக்கொண்ட ரஜினி பேசியதாவது: மனித வாழ்க்கையில் எப்போதாவது அற்புதங்கள் நடக்கும். எனக்கு அடிக்கடி நடக்கிறது. அந்த அற்புதங்களில் இதுவும் ஒன்று. சாதாரண பஸ் கண்டக்டராக இந்த நான் இவ்வளவு பெரிய மனிதர்களுக்கு நடுவில் இருக்கிறேன் என்றால் அது அற்புதமான விஷயம்தான்.
எனக்கு தாயும் தந்தையுமாக இருந்த என் அண்ணன் சத்யநாராயணராவ் கெய்ட்வாட், என் குரு பாலச்சந்தர், என் தமிழ் மக்களுக்கு இந்த விருதை சர்ப்பிக்கிறேன்.
இவ்வாறு ரஜினி பேசினார்.

அஜீத்தின் ‘வீரம்’ படத்தின் ஆடியோ டிசம்பர் 10-ல் வெளியீடு

ஆரம்பம்’ படத்திற்கு பிறகு அஜீத் நடித்துள்ள படம் ‘வீரம்’. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பாரதி ரெட்டி, வெங்கட்ராம ரெட்டி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது. இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். மேலும், சந்தானம், விதார்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பொங்கல் வெளியீடாக வரவுள்ள இப்படத்தின் இசையை வருகிற 20-ந் தேதி வெளியிடவுள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்கள் விநியோக உரிமையை ஜுங்கிலி நிறுவனம் வாங்கியுள்ளது.
இப்படத்தில் அஜீத் ரசிகர்களை கவரும் வண்ணம் ‘மாஸ்’ பாடல்களை அமைத்துள்ளார் தேவிஸ்ரீ பிரசாத். அவரது இசைப்பயணத்தில் இந்த படம் ஒரு மைல் கல்லாக இருககும் என்று இயக்குனர் சிவா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஜனவரி 10-ஆம் தேதி உலகமெங்கும் ‘வீரம்’ படம் வெளிவருகிறது. இப்படம் பாடல்களில் மட்டுமின்றி, கதை அமைப்பிலும், காட்சியமைப்பிலும் மிக பிரம்மாண்டமாக, ஜனரஞ்சமாக இருக்கும் என்று மேலும் அவர் கூறினார்.

சென்னை சர்வதேச திரைப்பட விழா: பெசன்ட் நகர் கடற்கரையில் ஜூம்பா நடனம்

11வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 12ம் தேதி தொடங்கி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த திரைப்பட விழாவில் உலகின் பல்வேறு மொழி திரைப்படங்கள் சென்னையில் குறிப்பிட்ட திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கு திரையிடப்பட்டு வருகிறது.
மறுபுறம் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் விதமாக சென்னையில் பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றன. அந்த வரிசையில் இன்று சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ஜூம்பா நடன கலை நிகழ்ச்சியை இவ்விழா குழுவினர் நடத்தினர்.
இதில் நடிகைகள் சுஹசினி, அனிதா ரத்னம், பூர்ணிமா பாக்யராஜ், தொகுப்பாளினி ரம்யா, நடிகர்கள் சாந்தனு, ராகவ், அசோக் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். இவர்கள் பொதுமக்கள் முன்பு நடனம் ஆடி அனைவரையும் கவர்ந்தனர். இந்த நிகழ்ச்சியை சென்னை தெற்கு மண்டல போக்குவரத்து துணை கமிஷ்னர் லட்சுமி தொடங்கி வைத்தார்.

Saturday, 14 December 2013

கதை விவாதகுழு அமைத்தார் விஜய் சேதுபதி!

தொடர் வெற்றிகளை ருசித்து வரும் விஜய்சேதுபதி தனது படங்களை தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருக்கிறார். ஒரு தோல்வி படம் கொடுத்து விட்டால் அதை சரிசெய்ய அடுத்தடுத்து இரண்டு ஹிட் படம் கொடுத்தாக வேண்டும்.
சம்பளமும் பாதியாக குறைந்து விடும். அதோடு விழுந்து விழுந்து எழுவதற்கு தான் மாஸ் ஸ்டார் இல்லை என்பதையும் அறிந்து வைத்திருக்கிறார்.
அதனால் தான் நடிக்க தகுதியான கதையை தேர்வு செய்ய கதை விவாதகுழு ஒன்றை அமைத்திருக்கிறார். அதில் தனக்கு நெருக்கமான நண்பர்கள் 5 பேரை அமர்த்தியிருக்கிறார். விஜய் சேதுபதிக்கு யார் கதை சொல்ல சென்றாலும் இந்த கதை விவாத குழுவிடம்தான் சொல்ல வேண்டும். 5 பேருக்கும் ஓகே என்றால்தான் அந்த கதையை விஜய்சேதுபதி கேட்பாராம்.
அப்படி சமீபத்தில் கதை குழுவால் ஓகே செய்யப்பட்ட கதைதான் மெல்லிசை. புதுமுக இயக்குனர் ரஞ்சித், 5 பேருக்கும் கதை சொல்லி அவர்களை ஓகே சொல்ல வைத்து விட்டார். த்ரில்லர் கதை. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நடிக்கிறார். நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்துக்கு பிறகு இருவரும் மீண்டும் இணைகிறார்கள்.

ஒல்லி குச்சி உடலுக்கு விடை கொடுத்துகுண்டாகவுள்ளார் தமன்னா

கேடிபடத்தின் மூலம் தமிழுக்கு வந்த தமன்னா, தொடர்ந்து, வேங்கை படம் வரை ஒல்லிக்குச்சி உடம்புக்காரியாகவே சினிமாவில் வலம் வந்தார். அஜித்துடன் நடித்துள்ள, வீரம்படத்திலும், அதே உடல் கட்டை, மெயின்டன் செய்துள்ளார்.
ஆனால், புதிய பட வேட்டையில் அவர் ஈடுபட்ட போது, ஒரு மாறுதலுக்காக உடல் எடையை அதிகப்படுத்துங்கள் என, சில டைரக்டர்கள் கூறியுள்ளார்களாம். உடம்பை ஏற்றுவது ஒரு விஷயமே அல்ல. ஆனால், அதன்பின் குறைப்பது சாதாரண விஷயமில்லைஎன, சில சினிமா முன்னோடிகளிடம் கலந்து பேசினாராம் தமன்னா.
அப்போது, ஸ்லிம் நடிகைகளை விட, குண்டுஸ் நடிகைகளுக்கு தென் மாநில சினிமாவில் எப்போதுமே மவுசு உண்டு. அதனால், எடையை ஏற்றினால் பிளஸ் தானே ஒழிய, மைனஸ் இல்லை என்றார்களாம். அதையடுத்து, வெயிட் போடும் முயற்சியில் இறங்கியுள்ளார் தமன்னா.

சென்சார் போர்டில் அரசியல் சார்பு கூடாது : கமல் பேச்சு!

சென்சார் போர்டில், அரசியல் சார்பானவர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும், என, கமல்ஹாசன் கூறினார். சென்னையில் , 11 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நேற்று துவங்கியது.
விழாவை துவங்கி வைத்து, நடிகர் கமலஹாசன் பேசியதாவது: தமிழ் சினிமா உலக சினிமாவேடு ஒட்டிப்போகும் வகையில், உயர்த்துவதற்கு, சிலர் முயற்சித்தால் மட்டும் முடியாது.
கதை, இயக்கம், கேமரா தொழில் நுட்பம், புதுதுமைகளை புகுத்தும் ஆர்வம் கொண்டவர்கள் நிறையபேர் திறமைகளை வளர்த்துக்கொண்டு,தமிழ் சினிமாவை உயர்த்த முயன்றால்,உலக சினிமா அளவிற்கு தமிழ் சினிமா உயரும்.
சென்சார் போர்டில் அரசியல் கூடாது. சினிமா பற்றி தெரியாதவர்களை, அரசியல் தொடர்பானவர்களை உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதால், சினிமாவிற்கு சிக்கல்களும் வந்துவிடுகிறது. சினிமா நன்கு தெரிந்தவர்கள் சென்சார்போர்டுக்கு வரவேண்டும்.இத்திரைப்பட விழா, சென்னை சினிமா ரசிகர்களுக்கு வித்தியாசமான படங்களை பார்க்க நல்ல வாய்ப்பு. இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்தி நடிகர் அமீர்கான் பேசும்போது, “”இந்திய சினிமா முன்னேறி வருகிறது. உலகத்தரத்திற்கு நிச்சயம் உயரும். கோவா சர்வதேச திரைப்பட விழா, மும்பை சர்வதேச திரைப்பட விழாக்களில்,உலக நாடுகளில் தயாரிக்கப்பட்ட பிரபலமான, வித்தியாசமான கதை மற்றும் நவீன தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்ட படங்கள் திரையிடப்பட்டன.
சென்னை சர்வதேச திரைப்பட விழாவிலும், இப்படி நிறைய படங்கள் திரையிடப்படுகின்றன. உலக கலாச்சாரத்தை, சினிமா தொழில் நுட்பத்தை இங்குள்ளவர்கள் எளிதாக தெரிந்து கொள்ள, இவ்விழா மிகவும் உதவியாக இருக்கும், என்றார்.
விழாவில், நடிகை சோபனா, சொர்ணமால்யா ஆகியோரின் நாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தன.தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் கல்யாண், “யு டிவி தனஞ்செயன், திரைப்பட விழாவை நடத்தும் சென்னை திரைப்படத் திறனாய்வு கழகத்தின் தலைவர் கண்ணன், பொதுச்செயலாளர் தங்கராஜ், சுகாசினி, லட்சுமி, ரோகிணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முதல் படமாக, ஜப்பானில் தயாரிக்கப்பட்ட, “லைக் பாதர் லைக் சன்படம் திரையிடப்பட்டது. வரும், 19ம் தேதி வரை, அபிராமி, ஐநாக்ஸ், உட்லண்ட்ஸ், ராணி சீதை அரங்கிலும் விழாப் படங்கள் திரையிடப்படுகின்றன.

நட்புக்காக நடிக்கிறார்சிம்பு

கவுதம் மேனன் இயக்கத்தில், சிம்பு நடிக்கும் படத்தின் பட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அப்படத்துக்கு ‘சட்டென்று மாறுது வானிலை’ என, தலைப்பு வைத்திருப்பதாக அறிவித்தனர்.
ஆனால், இப்போது அதே தலைப்பில், ஒரு படம் எடுக்கப்பட்டு, தணிக்கை சான்றிதழும் பெற்று விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. அதனால், வேறு நல்ல தலைப்பாக யோசித்து வருகிறார், கவுதம் மேனன்.
இந்த நிலையில், கவுதம் மேனன், அஜித்தை ஹீரோவாக வைத்து இயக்கும் படத்தில், சிம்புவும் முக்கிய வேடத்தில் நடிப்பதாக, மற்றொரு புதிய செய்தியும் இப்போது கசிந்துஉள்ளது. அஜித் தான், சிம்புவை இந்த படத்தில் நடிக்க வைக்கலாம் என்று, தன் விருப்பத்தை தெரிவித்தாராம்.
இதனால், அஜித்தின் படங்களை முதல் நாள், முதல் ஷோ பார்த்து விடும் தீவிர ரசிகரான சிம்பு, மட்டற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார்.

புறம்போக்கு வார்த்தைக்குமரியாதை ஏற்படுமாம்

ஆர்யா – விஜயசேதுபதி, ஆகியோர், புறம்போக்கு படத்துக்காக, கூட்டணி சேர்ந்துள்ளனர். இந்த படத்தின் தலைப்புக்கு பிரச்னை ஏற்பட்டு, பின், சுமுகமாக முடிந்தது.
இந்த படத்தின் கதையை கேட்ட, ஆர்யா – விஜயசேதுபதி இருவருமே வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறோம் என்ற உற்சாகத்தில் உள்ளனர். விஜயசேதுபதி கூறுகையில், இந்த புறம்போக்கு படத்தில் கமிட்டானதில் இருந்து, இந்த படத்தில் நீங்களா என்று, பலரும் என்னிடம் கேட்கின்றனர்.
ஆனால், கதையை, இப்போது சொல்ல முடியாது. மேலும், பொதுமக்களுக்கு நல்லது செய்யும் அனைவருமே புறம்போக்கு தான். இந்த படம் திரைக்கு வரும் போது, புறம்போக்கு என்ற வார்த்தைக்கு மக்கள் மத்தியில் தனி மரியாதை ஏற்படும் என்கிறார்.

விழா இல்லாமல் ஜில்லா ஆடியோ வெளியிட விஜய் முடிவு


ஜில்லா பட ஆடியோவை விழா எதுவும் இல்லாமல் நேரடியாக வெளியிட முடிவு செய்திருக்கிறார் விஜய். துப்பாக்கி, தலைவா படங்களையடுத்து விஜய் நடிக்கும் படம் ஜில்லா. காஜல் அகர்வால் ஹீரோயின். விஜய் தந்தையாக மோகன்லால் நடிக்கிறார். டி.இமான் இசை. ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கிறார். இப்படம் பொங்கல் தினத்தையொட்டி வரும் ஜனவரி 10ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம்பெறுகிறது. வழக்கமாக விஜய் நடிக்கும் படங்களின் ஆடியோ வெளியிட விழாக்கள் நடத்தப்படும். இப்படத்தை பொறுத்தவரை பாடல் வெளியீடு என்பது மிக எளிமையாக நடந்தால் போதும் என்று விஜய் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து தயாரிப்பாளர் சவுத்ரி விழா ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை. வரும் 22ம்தேதி தமிழ்நாடு முழுவதும் கடைகளில் நேரடியாக ஜில்லா ஆடியோ விற்பனைக்கு வரவுள்ளது. இதற்கிடையில் இப்படத்துக்காக ஐதராபாத்தில் பிரமாண்டமான செட் அமைத்து அதில் விஜய், மோகன்லால் இருவரும் இணைந்து 40 ஸ்டன்ட் கலைஞர்களுடன் மோதிய ஸ்டன்ட் காட்சி படமாக்கப்பட்டது. இப்படத்தையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ளார்.

மறக்க முடியாத தளபதி

சில சினிமாக்கள்தான், படம் வெளியாவதற்கு முன்பாகவே மக்கள் மத்தியில் மிகப் பிரமாண்டமான எதிர்பார்ப்பை உருவாக்கும். அதற்குப் பல காரணங்கள் இருப்பினும் பகுத்தறிய முடியாத காரணங்களும் அதன் பின்னால் தொழிற்படுகின்றன. ஏற்கனவே சூப்பர் ஸ்டாராகியிருந்த ரஜினியை ஒரு கடவுள் உருவாக மாற்றிய தளபதி படத்துக்கும் அப்படியான எதிர்பார்ப்பு படம் வருவதற்கு முன்பே உருவாகியிருந்தது.
மகாபாரதக் கதையைச் சமகாலக் கதையாக மாற்றியுள்ளார் மணிரத்னம் என்ற செய்தி முன்பே வெளியானது. ரஜினி கர்ணன் என்றும், மம்மூட்டி துரியோதனன் என்றும், அரவிந்தசுவாமி அர்ஜுனன் என்றும் பாத்திரங்கள் ஏற்கனவே ரசிகர்கள் மனதில் உருவாக்கப்பட்டுவிட்டன. ரஜினி முதல்முதலாக இப்படத்திற்காக ஒரு கோடி ரூபாயைச் சம்பளமாகப் பெற்றார் என்றும் தகவல்கள் வெளியாயின. இப்படத்தின் பூஜை அன்று ரஜினி, இளையராஜா, மம்மூட்டி மூவருக்கும் வீரவாள் ஒன்று பரிசாக அளிக்கப்பட்டது. பனியன்கள், தொப்பிகள், கீ செயின்கள் இப்படத்தின் பெயரில் வெளியானது. தளபதி பெயர், சம்பிரதாய எழுத்துருக்களைப் பயன்படுத்தாமல் நவீன வடிவத்தில் எழுதப்பட்டுப் பெரும் வரவேற்பையும் பெற்றது.
ஏ.ஆர். ரஹ்மானுக்கு முன்பாக உலகம் அதிக அளவில் கேட்ட தமிழ் பாடல் ‘ராக்கம்மா கையத் தட்டு’வாகத்தான் இருக்க வேண்டும். இந்தப் படத்தில் இளையராஜா ஒரு புதிய துள்ளலைச் சாத்தியப்படுத்தியிருந்தார். பி.பி.சி. நிறுவனத்தினர் அக்காலத்தில் நடத்திய கருத்துக்கணிப்பில், டாப் 10 வரிசையில் உலகெங்கும் கேட்கப்படும் பாடல் என்ற அந்தஸ்தை ராக்கம்மா கையத்தட்டு பெற்றது. மித்தாலி என்ற பாடகி பாடிய ‘யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே’ பாடலும் படம் வருவதற்கு முன்பே புகழ்பெற்றது. ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ பாடலும் அது உருவாக்கிய காட்சிகளும், உணர்வலைகளும் இளையராஜாவின் பாடல்களில் அழியாப் புகழ் கொண்டவை.
கர்ணன் பாத்திரம், சிவாஜி வாயிலாக அகலாத நினைவாக ஏற்கனவே தமிழகத்தில் சினிமா ரசிகர்கள் மனதில் பெற்றிருந்தது. இது ரஜினி ஏற்கும் கதாபாத்திரத்துக்குக் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ரஜினி, அரசியலுக்கு வருவார் என்ற ஆரூடங்களும் தளபதியைச் சுற்றிய காலகட்டத்தில்தான்தான் உருவாகத் தொடங்கியது. அப்போது மிகப் பெரிய நாயக வெற்றிடம் சமூகத்திலும் உருவாகியிருந்தது. எம்.ஜி.ஆரின் மறைவு ஏற்படுத்திய வெற்றிடம் அது. நேற்றைய மனிதன், இன்றைய தளபதி, நாளைய மன்னன் என்று சுவரொட்டிகள் ரஜினியின் அரசியல் தலைமையை எதிர்பார்த்து ரசிகர்களால் ஒட்டப்பட்டன.
இத்தனை எதிர்பார்ப்புகளோடு 1991ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளியான தளபதியின் முதல் காட்சி அதிகாலை 3 மணிக்குத் திரையிடப்பட்டது. அடுத்தடுத்துக் கிட்டத்தட்டப் பத்து, பதினைந்து நாட்கள் தமிழகம் முழுவதும் காலை 5 மணிக்கே முதல் காட்சியைத் தொடங்கிய சினிமாவும் தளபதியாகத்தான் இருக்க வேண்டும். காலையில் சிறப்பு வகுப்பு என்று பள்ளிக்குக் கிளம்பிப் போவதுபோலக் கிளம்பி, படம் பார்த்துவிட்டு ஒன்பது மணிக்கே பள்ளிக்கு மாணவர்கள் வர முடிந்தது.
தமிழ் சினிமாவில் நாயகன், சத்யா, உதயம் போன்ற படங்கள், குற்றம் மற்றும் வன்முறையைக் களனாகக் கொண்ட சினிமாவை அன்றைய சமூக, யதார்த்தச் சூழலோடு சேர்த்துச் சித்தரித்து மறுவரையறை செய்திருந்தன. மகாபாரதத்தை நவீன இந்தியாவில் எந்த நகரத்திலும் நடக்கும் தாதாக்களின் மோதல் கதையாக மணிரத்னம் தளபதியில் மாற்றினார். ரங்கப்பட்டினத்தில் உள்ள திப்புசுல்தானின் சமாதி அருகில் உள்ள தொன்மையான குளம், மகாபலிபுரம் கல்தூண்கள், நர்மதை ஆற்றின் பிரம்மாண்ட பாலம், நாயகன் சூர்யாவைத் தொடரும் சூரியன் என இந்தப் படத்தின் காவியச் சாயலுக்கு அவர் மெனக்கெட்டிருப்பார். தாய்மை, காதல், நட்பு இவற்றுக்கு இடையே அல்லாடும் நாயகனை, கர்ணன் என்னும் காவியப் பாத்திரத்தின் சாயலில் புத்திசாலித்தனமாகப் பரிமாறவும் செய்தார்.
இளையராஜா தனது உச்சபட்ச படைப்புத்திறனை வெளிப்படுத்திய படங்களில் ஒன்று தளபதி. சூர்யா, குழந்தையாக ரயில் பெட்டியில் விடப்படும்போதே இளையராஜாவின் புல்லாங்குழல் மூச்சுவிடத் தொடங்கிவிடும். நீல நிறப் பின்னணியில் ஒடும் ரயில் காட்சியில் ‘சின்னத்தாய் அவள் தந்த ராசாவே’ என்ற பாடலுக்கு முன்னால் முனகிப் பிளிறும் புல்லாங்குழலைத் திரையரங்க இருட்டுக்குள் கேட்ட தருணத்தை எவரும் மறக்கவே முடியாது.
தளபதி வெளிவந்த அதே தீபாவளி அன்றுதான் கமலஹாசனின் குணாவும் வெளிவந்தது. குணா படம் அக்காலகட்டத்தில் பெரிய தோல்வியை அடைந்தது. தளபதியும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றுதான் விமர்சகர்களால் குறிப்பிடப்படுகிறது. தளபதி படத்தில் ரஜினி போலீஸ்காரர்களைத் திரும்பத் தாக்காமல் சித்திரவதைக்குள்ளாவதையும், காதலியை இன்னொருவரிடம் இழப்பதையும் ரசிகர்கள் விரும்பவில்லை என்று காரணம் கூறப்படுகிறது.
என்றாலும் தளபதி முக்கியமான ஒரு நிகழ்வு. சிறந்த இந்திய வெகுஜனச் சினிமா, மகிழ்ச்சி, துக்கம், கேளிக்கை, துய்ப்பு, எல்லாமும் சேர்ந்த திருவிழாத் தன்மை கொண்டது. இதன் பிரமாண்ட எடுத்துக்காட்டாகத் தளபதியை நிச்சயம் சொல்ல முடியும். சண்டைக் காட்சிகள் யதார்த்த வன்முறைக்கு அருகில் காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்தப் படத்தின் பெயராலேயே இதன் ஸ்டன்ட் இயக்குனர் பின்பு ‘தளபதி’ தினேஷாக அறியப்பட்டார்.
தமிழ் சினிமாவில் வேகபாவத்தின் அடையாளமாக அறியப்பட்டிருந்த ரஜினி நடுப்பருவத்தை அடைந்திருந்த கட்டத்தில் அவரது ஆற்றல் குறையவே இல்லை என்று நிறுவின படம் தளபதி. தினேஷ் வடிவமைத்த சண்டைக் காட்சிகளுக்குத் திரையில் வலுவான உருவம் தந்ததில் ரஜினியின் படிமத்திற்கும் நடிப்புக்கும் முக்கிய இடம் உண்டு.
பிறப்பால் புறக்கணிக்கப்பட்ட, பிறப்பின் அடையாளம் காரணமாகவே குற்றவாளியாக வாழ நேர்ந்த ஒருவனின் துயரத்தையும், ஆற்றாமையையும் ரஜினி என்ற உச்ச நட்சத்திரம் அழகாகப் பிரதிபலித்தார். வெகு நாட்களுக்குப் பிறகு ‘நடிப்பதற்கு’ வாய்ப்பு கிடைத்ததும் இப்படத்தில்தான். புறக்கணிப்பின் வலியை, கழிவிரக்கத்தை, நாயகனுக்கேயுரிய கம்பீரத்தோடு அவர் மிதமாக வெளிப்படுத்தியிருப்பார்.
காதலியின் தந்தையுடன் மோதும் இடம், காவல் நிலையத்தில் அடிபடுவது, தம்பியிடம் பேசுவது ஆகிய காட்சிகளில், வாய்ப்பிருந்தால் பிரமாதமாகச் சோபிக்கக்கூடிய நடிகன் தான் என்று நிறுவியிருப்பார். அர்ஜுனின் தாய்தான் தன்னுடைய அம்மா என்ற உண்மை தெரிந்த பிறகு, கோவிலில் அம்மாவின் கூந்தலிலிருந்து உதிர்ந்த மல்லிகையைப் பார்த்தபடி உருகும் ரஜினியை அதற்குப் பிறகு நாம் பார்க்கவே முடியவில்லை.

செல்வராகவனுடன் இணையும் சிம்பு

செல்வராகவன் அடுத்து இயக்கவிருக்கும் படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சிம்பு.
'வாலு', 'வேட்டை மன்னன்', பாண்டிராஜ் இயக்கும் படம், கெளதம் மேனன் இயக்கும் படம் என வரிசையாக படங்களில் நடித்து வருகிறார் சிம்பு.
தற்போது 'இரண்டாம் உலகம்' படத்தினைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சிம்பு. இப்படத்தினை ரேடியன்ஸ் மீடியா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. பிப்ரவரி 2014ல் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
'இரண்டாம் உலகம்' தோல்விக்குப் பிறகு, குறுகிய கால தயாரிப்பில் ஒரு ஆக்‌ஷன் படத்தினை இயக்கவிருக்கிறார் செல்வராகவன். சமீபத்தில் சிம்பு - செல்வராகவன் இருவருமே சந்தித்து கதை குறித்து விவாதித்து இருக்கிறார்கள்.
திரைக்கதை அமைக்கும் பணியில் செல்வராகவன் ஈடுபட்டு வருகிறார். இப்படத்திற்கு சிம்பு - செல்வராகவன் இருவரின் நெருங்கிய நண்பரான யுவன் சங்கர் ராஜா இசையமைப்பார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
ஆனால், இப்படத்திற்கு சிம்புவைத் தவிர வேறு யாரும் இன்னும் ஒப்பந்தமாகவில்லை என்று அறிவித்திருக்கிறார்கள். சிம்பு - செல்வராகவன் இணைந்துள்ளதால் இப்படத்திற்கு ஏகத்திற்கு எதிர்பார்ப்பு எகிறி கிடக்கிறது.

'வேலையில்லா பட்டதாரி' டீஸர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்?

'வேலையில்லா பட்டதாரி' படத்தின் டீஸர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக், கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என அறிவிப்பு.
தனுஷ், அமலா பால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வேலையில்லா பட்டதாரி'. அனிருத் இசையமைக்க, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கி வருகிறார். வுண்டர்பார் நிறுவனம் மூலம் இப்படத்தினை தயாரித்து வருகிறார் தனுஷ்.
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 25 வது படம் 'வேலையில்லா பட்டதாரி' என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் இசை வெளியீடு ஜனவரி 3ம் தேதி நடைபெறும் என ஏற்கனவே தனுஷ் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் டீஸர், ஃபர்ஸ்ட் லுக் குறித்து தனுஷ் தனது ட்விட்டர் தளத்தில், "'வேலையில்லா பட்டதாரி' படத்தின் டீஸர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25ம் தேதி வெளியாகும். ஜனவரி 3ம் தேதி படத்தின் இசையும், கோடை விடுமுறைக்கு படம் வெளியாகும்" என்று தெரிவித்திருக்கிறார்.
"வேலையில்லா பட்டதாரி! தொட்டு பாத்தா, ஷாக் அடிக்கும் வேறமாதிரி" என தொடங்கும் பாடலை தனுஷ் எழுதியிருக்கிறார்.

Friday, 13 December 2013

Shahrukh Khan, Salman Khan, Aamir Khan – Who is Madhuri Dixit dying to work with?



Madhuri Dixit-Nene is looking for a plum project with a top Khan. So is it Salman Khan , Shahrukh Khan or Aamir Khan that this dhak-dhak gal wants to work with? Be it for Dil Toh Pagal Hai or Hum Aapke Hain Koun or Dil, whenever Madhuri Dixit has been paired opposite the three leading Khans of Bollywood – it has been a hit. And Ms Dixit-Nene understands this very well. While she is ready for a comeback on 70mm after 7 years with Deah ishqiya looks like she has her wishlist is ready for future projects. While all three Khans are mad about Madhuri, Mads herself prefers Salman over Shahrukh and Aamir. At least that’s what the actor said in an interview – that if given an opportunity, she wants to work with her Hum Aapke Hain Koun co-star Salman Khan. Yes, you heard it right!

Madhuri who was at a Deah ishqiya promotional event yesterday was asked that if given an opportunity, would she like to work with the Dabangg Khan? And here is what she said, “Yes, why not. Given an opportunity, I would surely like to work with Salman”. That’s not all. She seems to have given this question an afterthought too. Coz we overheard overheard Madhuri discuss her wish to work with Sallu miyaan even post the interview with another lady (her manager?).


Now this is some news, isn’t it? While Maduri is all excited, we can’t help but wonder what role will Salman have for Madhuri? Given the fact that he offered Kareena Kapoor Khan his mother’s role in Dabangg 10 and Tabu will be seen as his older sister in Jai Ho. We wonder what Madhuri has to tell after hearing this, will she still work with Sallu?

Will Hrithik Roshan move out his parents home?



Hrithik Roshan has confirmed that his wife and he are separating. The actor said in an open statement to the media that his marriage is over,”Sussanne has decided to separate from me and end our 17-year relationship. This is a very trying time for the entire family and I request the media and the people to grant us our privacy at this time.”Ever since the media circuit has been abuzz with rumours about serious problems in the Hrithik -Sussanne marriage. We had even heard that the couple was heading for a divorce and all the paperwork for the split was being processed. However, both Hrithik and Sussanne came out in open denying these rumours and said that all is totally well between the two. In fact Farah Khan Ali had tweeted specially after Rakesh Roshan’s birthday denying all these reports. However, the recent incidents were a proof of trouble in their paradise. Now that the couple has finally filed for a divorce, what’s more shocking is that after the split, Sussanne will be staying with her sons Hrehaan and Hridaan with the Roshan in their Juhu residence. And if the buzz is to be believed then it is Hrithik who will move out of his parents home. Apparently the actor was recently house hunting before he left the country. However the estate agents are on a search for a suitable home for the Krrish 3 actor.
With both Hrithik and Sussane unable to bridge the gap between them. Looks like they are firm on their decision and are not looking at a reconciliation. So we’ll have to see which of these two will