விஜய் சேதுபதி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் ரம்மி. இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் இனிகோ பிரபாகரன், ஐஸ்வர்யா, காயத்ரி, பரோட்டா சூரி மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கான இசை டி.இமான். 1980களில் சிவகங்கை பகுதியில் நடந்த உண்மை சம்பவம் பற்றிய திரைப்படமே இது.
இந்த படத்தை லிங்குசாமியிடம் தயாரிப்பு நிர்வாகியாக இருந்த பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதன் டிரைலர் அனைவரையும் கவரும் வகையில் மிகவும் மிரட்டலாக தயாராகியுள்ளது.
விழாவில் பேசிய விஜய் சேதுபதி, ”இந்த படம் எனக்கு முக்கியமான படம் இதில நடித்துள்ள அத்தனை பேரும் கடுமையாக உழைச்சிருக்காங்க. சில கதைகளை கேட்டவுடன் இது ஜெயிக்கிற படம்னு தோணும். அந்த படம் இதுதான்.” என்றார்.
தமில் சினிமாவில் விஜய் சேதுபதியின் வளர்ச்சி யாரும் எதிர்பார்க்காதது... அதே போன்று அவரது ஒவ்வோரு படத்திலும் அவர் எப்படி தோன்றுவார்..? அவரது கதாப்பாத்திரம் எப்படியிருக்கும்...? என்று அவரது ரசிகர்களாலும் தீர்மானிக்க முடியாதது. அப்படியொரு எதிர்பார்ப்புதான் வரவிருக்கும் ரம்மி படத்திற்கும் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment