Sunday, 27 October 2013

ஈகோ பார்க்காத ஆரம்பம் அஜீத்! -நயன்தாரா புகழாரம்

அஜீத் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் படம் ஆரம்பம். ரசிகர்களுக்கு தனது தீபாவளி போனசாக அஜீத் கொடுக்கும் இந்த படத்தில் நயன்தாரா-டாப்ஸி என்ற இரண்டு பேரும் நாயகிகளாக நடிக்கின்றனர். அதிலும் பில்லா படத்தில் அஜீத்துடன் நடித்த நயன்தாரா மீண்டும் இப்படத்தில் அவருடன் டூயட் பாடியிருக்கிறார்.
முதல் ரவுண்டில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்த ஹீரோக்கள் மீண்டும் அவருடன் நடிப்பதை தவிர்க்கும் நிலையில், அஜீத் மட்டும் கதைக்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்றால் அவரை ஒப்பந்தம் செய்துவிடுங்கள் என்றாராம். இந்த தகவலை, சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்த நயன்தாரா, அஜீத் மாதிரி ஒரு நல்ல மனம் கொண்ட நடிகரை என் அனுபவத்தில் நான் பார்த்ததில்லை என்றார்.
அதுமட்டுமின்றி, படப்பிடிப்பு தளத்துக்கு எந்த முன்னணி ஹீரோக்கள் வந்துவிட்டாலும், மற்றவர்களை ஓரங்கட்டிவிட்டு அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளைதான் படமாக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இயக்குனர்களும் அதைத்தான் செய்வார்கள்.
ஆனால் அஜீத், மற்றவர்களை வைத்து படமாக்கப்படும் காட்சிகள் முடியும் வரை பொறுமையாக ஸ்பாட்டிலேயே காத்துக்கொண்டிருப்பார். அப்போது காட்சிகள் நன்றாக வர வேண்டும் என்பதற்காக, யாருடைய நடிப்பிலாவது குறைகள் தெரிந்தால் தன்சார்பில் டிப்சும் கொடுப்பார். இந்த பெருந்தன்மை அஜீத்தை தவிர வேறு யாருக்குமே வராது என்றார் நயன்தாரா.

No comments:

Post a Comment