கேரளத்திலிருந்து வருகை தந்த புது வரவு நடிகைகளில், நஸ்ரியா தான் டாப் நடிகை ஆவார் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், தொப்புள் விவகாரத்தில், அவர் சர்ச்சையை ஏற்படுத்தியதால், அவர் மீது, ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, இப்போது லட்சுமி மேனனின் மவுசு கூடியுள்ளது. கும்கி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி படங்களில் நடித்த இவர், தற்போது விஷாலுடன், பாண்டிய நாடு சித்தார்த்துடன், ஜிகர்தண்டா கவுதமுடன், சிப்பாய் என, பல படங்களில் நடிக்கிறார்.
அடுத்து, பாண்டிய நாடு படத்தைத் தொடர்ந்து, விஷால் நடிக்கும் புதிய படத்திலும் நடிக்கிறார். இதற்கு காரணம் அவரது நடிப்புத் திறமை தான். கேரக்டரோடு ஒன்றி நடிக்கும் லட்சுமி மேனன், அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுகிறார்.
கூடவே, எந்தவித வெட்டி பந்தாக்களும் செய்யாமல், இப்போது வரை புதுமுக நடிகைகள் போன்றே, நல்ல பிள்ளையாக நடந்து கொள்கிறார் என, அவருக்கு பாராட்டு பத்திரம் வாசிக்கிறது, கோடம்பாக்கம்.
No comments:
Post a Comment