Friday, 25 October 2013

பாட்டுக்கு சில தலைவிகள்

ஒரு பாடகி அழகாக இருந்தால் அவரை நடிக்கவும் அழைப்பார்கள் என்பதற்கு வசுந்தரதாஸ் பெரிய உதாரணம். அவருக்கு முன்பே பண்டைய காலத்தில் பல அழகான பாடகிகள் நடிக்க வந்திருக்கிறார்கள். அது வேறு விஷயம். இப்போது முதலில் நடிக்க வந்து பின்பு பாடுவதுதான் பேஷன் போலிருக்கிறது.
 ரம்யா நம்பீசன் பாண்டியநாடு படத்தில் ஒரு பாடல் பாடினார் அல்லவா? அந்த பாடல் தாறுமாறான ஹிட். இதில் அவருக்கும் சந்தோஷம், படக்குழுவினருக்கும் சந்தோஷம். இதை தொடர்ந்து இமான் இசையில் ரம்யா தொடர்ந்து பாடுவார் போல தெரிகிறது. இதற்கிடையில் இந்த பாடலை கேட்ட பிந்து மாதவிக்கும் பாடகியாக வேண்டும் என்கிற ஆசை வந்திருக்கிறதாம். அடிப்படையில் இவரும் ஒரு சிறந்த பாடகி. வெட்கத்தை விட்டு இமானிடம் வாய்ப்பே கேட்டுவிட்டாராம். அவரும் சரி என்று சொல்லியிருப்பதாக தகவல். இன்னும் யார் யார் பாடணுமோ, மொத்தமா சொல்லிட்டா இசையமைப்பாளர்களும் ஒரு முடிவுக்கு வர வசதியாக இருக்குமில்ல?

No comments:

Post a Comment