Sunday, 20 October 2013

நாங்கள் இருவரும் தொடர்ந்து பணியாற்ற இயலாது டைரக்டர் கவுதம் படத்தில் இருந்து விலகுகிறேன்- நடிகர் சூர்யா



நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கடந்த 2012-ம் ஆண்டு ஜூன்  மாதம் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில், நான் கதாநாயகனாக நடிப்பதாக முடிவானது.  பல்வேறு காரணங்களால் இப்போது நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்ற இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது என்பதை  வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய திரை யுலக அனுபவத்தின் அடிப் படையில் நான் நடிக்கும் படத்தின் கதை, மனதிற்கு முழுத்திருப்தியை தந்த பிறகே படப்பிடிப்பு செல்வது என்பதை  கொள்கை முடிவாக  நடை முறைப்படுத்தி வருகிறேன். ரசிகர்கள் என் மீது வைத் திருக்கும்   அன்¬பயும் எதிர்பார்பபையும் பூர்த்தி செய்வதே ஒரு நடிகனாக  என்னுடைய முதல் கடமை யாக கருதுகிறேன்.
இயக்குனர்  கவுதம் அவர்களிடம் என்னுடைய இந்தக் கொள்கை முடிவை  முதல் நாளே   தெளிவாக சொல்லி அதற்கு அவர் சம்மதித்த பிறகே  நாங்கள் இருவரும்  இணைந்து பணியாற்றுவது என முடிவு செய்தோம்.  இதையே ஒப்பந்தமாகவும் செய்து கொண்டோம். ஆனால் ஒப்பந்தம் செய்து  ஒருவருட காலம் கழிந்த  பிறகும் கவுதம்  இன்னும் என்னிடம்  முழு கதைய திருப்தி அளிக்கும் வகையில்  தரவில்லை.
சிங்கம்-2 படம் முடிந்த பிறகு ஆறு மாதங்களாக முழுக்கதையையும் எதிர்பார்த்து காத்திருந்தேன் முதலில் பூஜை போட்டு விடலாம் என்றார். நட்பின் அடிப்படையில்  அதற்கு ஒத்துழைத்தேன்.  ஒரு டெஸ்ட் ஷூட்  செய்து கெட்டப்  மாற்றங்களை முடிவு செய்யலாம் என்றார். தயக்கம் இருந்தாலும் கவுதம் மீது இருக்கும் நன்மதிப்பின் அடிப்படையில் அதற்கும் ஒத்துழைத்தேன். பல மாதங் களாக ஷூட்டிங் போகாமல், வீட்டில்  காத்திருக்கிறேன். கவுதமிடம் இருந்து நடிகனாக எனக்கு திருப்தி அளிக்கும் முழுக்கதை கிடைக்கும் என்று இன்றுவரை  காத்திருந்தேன். அது நடக்கவில்லை.
முன்பே கவுதம்  சென் னையில் ஒரு மழை காலம்  படத்திற்கு பூஜை போட்டு  ஒரு வாரம் மட்டும் ஷூட்டிங் செய்து விட்டு  எட்டு மாதங்கள் காத்திருந் தும் கடைசியில்  அந்த படம் நடக்கவில்லை.  இப்போது இந்தப் படத்திற்கு அதே அனுபவம்  தொடர்ந்து ஏற்படுகிறது.
ஆறு மாத காலம் காத்திருத் தலுக்குப் பிறகு  இனி காத்திருக்க இயலாத சூழல் எனக்கு ஏற்பட்டுள்ளது. நானும், கவுதமும் கருத்தளவிலும், எதிரெதிர் திசையில் பயணிக்கிறோம் என்று தோன்றுகிறது. இந்த  நிலையில் நாங்கள் இருவரும் தொடர்ந்து பணியாற்ற  இயலாது என்று உறுதியாக நினைக்கிறேன்.
ஒரு   திரைப்படம்  உருவாவதில் பலரின் பங்கு முக்கியமாகவும், அவசியமாகவும் இருக்கிறது. நடிகனாக நம்பிக்கை இல்லாமல் செய்த படங்கள்  எனக்கு சரியான   பாடங்களைத் தந்திருக்கின்றன.  நட்பின் அடிப்படையில் கவுதமுடன் இணைந்து பணியாற்ற  என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும்  எடுத்து விட்டேன்.  இனி நாங்கள் இருவரும் இந்தப் படத்தில் இணைந்து  பணியாற்ற இயலாது. அதனால் கவுதம்  படத்தில் இருந்து விலகி கொள்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.



No comments:

Post a Comment