ஆந்திராவில் வெற்றி பெற்ற ‘ஆஞ்சநேயலு’ என்ற தெலுங்கு படம் தமிழில், ‘ரிப்போர்ட்டர்’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. இந்த படத்தில், நயன்தாரா பத்திரிகை நிருபராக நடித்து இருக்கிறார். அவருடன் பிரகாஷ்ராஜ், நாசர், சுமன், காதல் தண்டபாணி, ஜெயப்பிரகாஷ், கோட்டா சீனிவாசராவ், அருந்ததி ஆகியோரும் நடித்துள்ளனர்.இந்த படத்துக்கு தமன் இசையமைத்து இருக்கிறார். அமர், தீஜாரவி ஆகிய இருவரும் வசனம் எழுத, பரசுராம் டைரக்டு செய்திருக்கிறார். தீபாவளி வெளியீடாக திரைக்கு வர இருக்கும் இந்த படத்தை பிரிமியர் பிலிம்ஸ் சார்பில் கே.ரவிசங்கர் வெளியிடுகிறார்.
No comments:
Post a Comment