ஆர்யா எல்லா நடிகைகளையும் கவர்வது எப்படி? என்ற ரகசியத்தை விஷால் போட்டு உடைத்தார். பெண்களிடம் பேசவில்லை என்றால் ஆர்யாவுக்கு ஜுரம் வந்து விடும் என்று அவர் கூறினார்.பேட்டி
நடிகர்கள் விஷால், ஆர்யா இருவரும் நெருக்கமான நண்பர்கள். சினிமாவுக்கு வருவதற்கு முன்பிருந்தே இருவருக்கும் இடையே நட்பு இருந்து வருகிறது. நெருக்கமான நண்பர் என்ற முறையில், ஆர்யாவின் சினேகிதிகள் மற்றும் திருமண தகவல்களை விஷால் ஒளிவு மறைவு இல்லாமல் வெளியிட்டார். அவர் கூறியதாவது:
ஆர்யாவும், நானும் நெருக்கமான நண்பர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த சங்கதி. எங்கள் இருவருக்குமே திருமண பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. என்றாலும், ஆர்யாவுக்குத்தான் முதலில் திருமணம் நடைபெறும். இப்படி சொல்வதால், அவன் என்னை திட்டுவான். நான் பாட்டுக்கு ஜாலியாக சுற்றிக்கொண்டிருக்கிறேன். என்னை ஏன் மாட்டி விடுகிறாய்? என்று கோபித்துக் கொள்வான்.
ஒரே மேடையில் திருமணம்
ஆனால், ஒரு உண்மையை இங்கே சொல்ல வேண்டும். எங்கள் இரண்டு பேரின் பெற்றோர்களும் ஒரு திருமண வீட்டில் சந்தித்துக் கொண்டார்கள். எனக்கும், ஆர்யாவுக்கும் ஒரேநாளில், ஒரே மேடையில் திருமணத்தை நடத்தி விடலாம் என்று முடிவு செய்து இருக்கிறார்கள். நான் அதற்கு சம்மதிக்கவில்லை.
ஆர்யாவுக்கு முதலில் திருமணம் நடக்கட்டும். அடுத்த நாளே நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியிருக்கிறேன். இதற்கு காரணம் இருக்கிறது.
சினேகிதிகள்
ஆர்யாவுக்கு நிறைய சினேகிதிகள் இருக்கிறார்கள். பெண்கள் மத்தியில் ஒரு மணி நேரம் பேசவில்லை என்றால் அவனுக்கு ஜுரம் வந்து விடும். அந்த அளவுக்கு அவனுக்கு பெண்களை பிடிக்கும். பெண்களுக்கு அவனை பிடிக்கும். நிறைய பேருக்கு பிரியாணி கொடுத்தே உஷார் பண்ணி விடுகிறான்.
அதனால், அவன் வசிக்கும் அண்ணாநகர் பக்கம் போகாதே...அங்கே ஆர்யா ஜாக்கிரதை என்று போர்டே தொங்க விட்டு இருக்கிறார்கள் என்று என்னுடன் நடிக்கும் லட்சுமி மேனனிடம் சொல்லி வைத்து இருக்கிறேன்.
எனக்கு ஆர்யாவிடம் பிடித்த விஷயம், எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டான். எந்த பிரச்சினை என்றாலும் சுலபமாக எடுத்துக் கொள்வான். நட்சத்திர கிரிக்கெட்டில் எல்லா நடிகர்களும் மைதானத்தில் ஆட தயாராக நின்றோம். நடுவரும் வந்து விட்டார். ஆர்யா மட்டும் வரவில்லை. அவனை தேடியபோது, தூரத்தில் கையில் தட்டை வைத்துக்கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தான். ÔÔகொஞ்சம் இரு மச்சான். இதோ வந்துடறேன்ÕÕ என்று சைகையில் சொன்னான். அதை இப்போது நினைத்தாலும், எனக்கு சிரிப்பு வருகிறது.இவ்வாறு விஷால் கூறினார்.
பாண்டிய நாடு
}
விஷால்-லட்சுமி மேனன் நடித்து தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் பாண்டிய நாடு படம் பற்றி விஷால் கூறியதாவது:
ஒரு நடுத்தர வகுப்பு இளைஞனின் பழிவாங்கல்தான், பாண்டிய நாடு படத்தின் கதை. இதில், என் அப்பாவாக பாரதிராஜா நடித்து இருக்கிறார். படத்தின் கடைசி 20 நிமிடங்கள், படம் பார்ப்பவர்களை இருக்கையின் நுனியில் உட்கார வைத்து விடும். பயந்த சுபாவமுள்ள திக்குவாய் இளைஞனாக நான் வருகிறேன். நான் எப்படி அடிதடி வீரனாக மாறுகிறேன் என்பதுதான் படத்தின் முக்கிய அம்சம்.
மதுரை பின்னணியில் கதைக்களம் அமைக்கப்பட்டு இருக்கிறது. சண்டைக்கோழி படத்தில் ராஜ்கிரணுக்கும், எனக்குமான அப்பா-மகன் கதாபாத்திரங்கள் எவ்வளவு கனமாக இருந்ததோ, அதைவிட இந்த படத்தில் பாரதிராஜாவுக்கும், எனக்குமான கதாபாத்திரங்கள் மிக கனமாக இருக்கும்.
No comments:
Post a Comment