ஆல் இன் ஆல் அழகுராஜ்
யுவன், ஹரிஷ் ஜெயராஜ்க்கு பின்னர் ,தமனுடன் இனைந்திருக்கிறார் ராஜேஸ் .கவுண்டமணி கவுரவபடுத்தும் தலைப்பே படம் நகைச்சுவை பின்னனி கொண்டது என்பது கூறிவிடுகிறது .ஆனால் பாடல்களை இளையராஜாவுக்கு அர்ப்பணம் செயம் விதமாக தமன் உருவாக்கியிருக்கிறார் .மிக முக்கியமாக ராஜாவின் புகழ்பெற்ற பாடல்களின் தாளக்கட்டுகளை ஆதாரமாக வைத்தே மெட்டுகளை உருவாக்கியிருக்கிறார்,ஆல் இன் ஆல்,பாடலில் சுசித் சுரேசன் ,செந்தில் தாஸ் போன்ற புதிய குரல்கள் ,நாயகனின் பெருமையை பாடுகின்றன .ஆர்க்கெஸ்ட் ரேஷன் மற்றும் டிரெம்ஸ் இசையில் ,ராஜாவின் பாதிப்பு தெரிகிறது.''யாருக்கும் சொல்லாமலே ''பாடல் ராஜாவின் ''கட்டி வச்சிக்கோ''பாடலின் தாளக்கட்டில் அமைந்த புதிய மெட்டு .'கவிதை படு குயிலே 'பாடலின் தாளத்தில் தொடங்குகிறது.''உன்ன பார்த்த நேரம் ''பாடல் எண்பதுகளின் பாணியில் அமைந்த இந்த பாடலில் விஜய் யேசுதாஸ் குரல் இனிமையாக ஒலிக்கிறது .மன்னன் படத்தின் ''ராஜாதி ராஜா ''இரண்டவது இடையிசையில் வரும் தாளத்தை வைத்து உருவாக்கப்பட்ட ''யம்மா யம்மா ''பாடலின் உற்சாகம் வழிகிறது .வளமான இசை கற்பனை கொண்ட தமனுக்கு இது வெற்றி ஆல்பம்தான் .தவிர தான் ஒரு ராஜா ரசிகர் என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டார் என்று தான் சொல்லவேண்டும் ..
நன்றி தி ஹிந்து
நன்றி தி ஹிந்து

No comments:
Post a Comment