Friday, 18 October 2013

வாள் சுழற்ற ஆசை !

வாள் சுழற்ற  ஆசை !
கோலிவுட்டை  குத்தகைக்கு எடுத்திருக்கும் கோதுமை  நிற ஏஞ்சல்களில் காஜல் அகர்வால் கவிதை மாதிரி அத்தனை அழகு .தெனிந்திய சினிமாவை தாண்டி ,பாலிவூட்  வரை பயணம் புறப்பட்ட இவரது கால்சீட்டை ஒரு புதையலை போல் பார்க்கிறார்கள் கோலிவுட்டில்.விஜய் ,கார்த்தி ,சூர்யா  என்று தமிழில் மிக கவனமாக படங்களை தேர்வு  செய்கிறார் .ஜில்ல படபிடிப்புக்காக பல்கரியாவில் முகாமிட்டு இருந்த காஜல் மின்னஞ்சல் வழியாக பேசியதிலிருந்து .....

 "துப்பாக்கி"  மாதிரி  ஒரு வெற்றி படம் கொடுத்துட்டு எங்க  போனிங்க ?
பிரேக் எடுத்துக்கிற பழக்கம் எனக்கு இல்லை .round the clock  என்போமே அப்படித்தான் என் கேரியரை  பார்த்துக்கிரேன். தமிழ், தெலுங்கு,ஹிந்தி  படங்கள்நு  மாறிமாறி ஓடி கிட்டு இருக்கேன் ."துப்பாக்கி" படத்துக்கு முன்னாடியும் இப்படி தான்  ஓடிகிட்டே இருந்தேன் .தமிழ்ல  படங்கள் வெளியாகளையே தவிர தொடர்ந்து நான்  பிசியாகத்தான் இருக்கேன். 

முதல் முறைய ஒரு காமெடி  படத்துல நடிசிருக்கிங்க போல ?
அல்குரஜவைதானே கேக்குறிங்க?ஒட்டுமொத்த  ஷூட்டிங் நாட்களும் மறக்க முடியாத உணர்வுபூர்வமான அனுபவம் .குறிப்பா ,பிரபு ,சரண்யா ,கார்த்தி.சந்தானம்  இவங்களோட நடிச்ச நாட்கள் இனிமையா இருந்தது . படத்தின் இயக்குனர் ராஜேஷ் பற்றி சொல்லியாகவேண்டும் .காமெடி கதைகளை அழகாக கொடுக்கும் திறமையான இயக்குனர்.கூட இருகிரவன்களோட  ஸ்பெஷல் என்னன்னு கவனிச்சி அதை இயல்பா காமெடி கலந்து பாடமாகிடுவார் .காமெடி படங்கள் இப்போ எனக்கு  ரொம்ப பிடிக்க ஆரம்பிடிச்சு .எதிர் காலத்தில் நிறைய காமெடி படங்கலுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன் . 

மறுபடியும் கார்த்தி கூட ஜோடி சேர்ந்துருக்கி ங்க?என்ன ஸ்பெஷல் ..
 நடிப்பை தவிர தனிப்பட்ட மனிதராகவும்  எனக்கு பிடித்தவர்.அவர் மேல்  தனி மதிப்பும் மரியாதையும் உண்டு.சினிமா தவிர விளம்பர படங்களிலும் அவரோடு நடிச்சிருக்கேன் .அவர் கூட திரும்பவும் நடிப்பது சந்தோஷமான அனுபவம் .

வெளிநாட்டு  படபிடிப்பில் அழகான இடங்களை எல்லாம் ரொம்ப  ரசிப்பிங்களாமே ?
ஆமாம் .புது இலங்காள்னா மனிகனக்காக  நின்னு ரசிப்பேன் .கே .வி .ஆனந்த்  சார் இயக்கத்தில்  சூர்யாவோட சேர்ந்து மாற்றான் பட ஷூட்டிங் நார்வே நாட்டில் சில பகுதிகளில் சூட் பண்ணினாங்க .வாவ் !மறக்க முடியாத நாடு .எபோ பல்கேரியவை ஒட்டு மொத்தமா என் கண்களால் கொள்ளை அடிசிகிட்டு இருக்கேன் ..

சினிமா நிகழ்சிகளில் ரொம்ப அழகா ஆடை அணியரிங்களே ?
 உடைகள் எனக்கு ரொம்ப முக்கியம் .ட்ரெஸ்கோட்ல எனக்கு நம்பிகை உண்டு இது தான் எனக்கு பிடித்த  டிரஸ் என்று குறிபிட்டு சொல்ல முடியாது .இந்தியன் வெஸ்ட்ரன் கலாச்சார உடைகள்னா அவ்ளோ பிடிக்கும் .அதோட
.நான் சீசன் வியர் பரியை .ஒவ்வொரு அக்கேசன் ளையும் அந்தந்த நேரத்து பேஷன் காஸ்டியும்  விரும்பி தேர்ந்தெடுப்பேன் .ஆனா அதுல ஒரு டீசன்சி இருக்கும் .ஆடு ரொம்ப முக்கியம் . 

வீட்ல எப்படி
நாம  இருக்கிற சூழலுக்கு தகுந்த மாதிரி நம்மை ஜாலிய வாசிக்கணும்னு விரும்புவேன் .படபிடிப்புல முழு கவனம் என்னோட வேலையில தான் இருக்கும் .என்னோட ர்லாக்ஸ் வீட்ல இருக்கும் நேரத்தில் மட்டும் தான் .
அதுவும் நெருங்கிய நண்பர்கள் ,குடும்பம்.சேர்த்துட்டா  போதும் அந்த இடத்தை நான் ஒருத்தியே கலகலப்பா மாத்திடுவேன் ...

உங்க கனவு ரோல் 
"முகல் இ அஸம்" .1960 இல் முகலாய சாம்ராஜ்ஜியத்தை பற்றி வந்த வரலாற்று படம்.அந்த மாதிரியான ஒரு படத்துல நடிக்கணும் !வரலாற்று களத்துல வாள்  சுழற்றுற இளவரசியா நடிக்கணும் ..இன்னும் நிறைய ........


No comments:

Post a Comment