Tuesday, 22 October 2013

படப்பிடிப்புக்காக காட்டை சீர்குலைத்துவிட்டு சீர்படுத்தி கொடுத்த படக்குழு!

மும்பையில் சினிமா டெக்னீஷயன் படித்த வி.ராஜேஷ் ஆல்ஃபிரெட் என்பவர் டைரக்ட் செய்து வரும் படம் சுற்றுலா. ஷாலினி தம்பி ரிச்சர்ட், எங்கேயும் எப்போதும் மிதுன், நியூபேஸ் ஹீரோயின் ஸ்ரீஜி ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தை இரண்டு வருடங்களுக்கும் மேலாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 

ஏன் அத்தனை நாள் ஆச்சு என்பது பற்றி இயக்குனர் ராஜேஷ் ஆல்ஃபிரெட் கூறியதாவது: "ஹீரோவும், ஹீரோயினும் உயிருக்கு உயிராக காதலிக்கிறாங்க. காதலுக்கு ரெண்டு சைடிலிருந்தும் கடும் எதிர்ப்பு. உடனே ஊட்டிக்கு ஓடிப்போயி கல்யாணம் பண்ணிக்க பிளான் பண்றாங்க. பிரண்டுங்களும் அதுக்கு ஹெல்ப் பண்றாங்க. கல்யாணம் பண்ற அன்னிக்க பிரண்டுங்க மிஸ் ஆயிடுறாங்க. லவ்வர்சுக்கு போன்ல மிரட்டல் வருது. எல்லோரும் உயிர் பிழைக்க காட்டுக்குள்ள ஓடுறாங்க. அவுங்களுக்கு என்ன நடக்குதுங்றதுதான் ஸ்கிரீன்ப்ளேவும், கிளைமாக்சும்.

80 சதவீத படம் பாரஸ்ட்டுலதான் நடக்குது. அதுக்கு பர்மிஷன் வாங்குறதுல லேட்டாச்சு. இதுவரை யாரும் ஷூட் பண்ணாத இடமா போயி கஷ்டப்பட்டு ஷூட் பண்ணினோம். பல மைல் தூரம் நடந்தே போனோம். ஜிம்மி ஜிப், கிரேன்லாம் கொண்டு போகமுடியாத இடத்துல நாங்களே படிப்பிடிப்பு கருவியை உருவாக்கி ஷூட் பண்ணினோம். அதான் படம் லேட். ஊட்டி காட்டுல ஷூட் பண்ணிட்டிருந்தப்போ திடீர்னு அங்க பாரஸ்ட் ஆபீசர் வந்தாரு. செட் ஆளுங்க விபரம் தெரியாம காட்டுல உள்ள சில அபூர்வ செடிய வெட்டிட்டாங்க. அதுல போன்சாய் செடிகளும் இருந்துச்சு. 15 லட்சம் ரூபாய் அபராதம் கட்டச் சொன்னாங்க. நாங்க சார் அபராதம் வேண்டாம். இதை சரி பண்ணிக் கொடுத்துடுறோம் அதுக்கு என்ன செலவானாலும் நாங்களே ஏத்துக்கிறோம்னு சொல்லி பல லட்சம் செலவு செய்து போன்சாய் செடிகளை நட்டு எப்படி இருந்துச்சோ அப்படியே காட்டை ஒப்படைச்சோம்" என்றார்.

No comments:

Post a Comment