Tuesday, 22 October 2013

ஆந்திராவை கைப்பற்றஅஞ்சலி தீவிரம்

சேட்டை படத்திற்கு பின், சென்னையை காலி செய்துவிட்டு ஆந்திராவுக்கு இடம் பெயர்ந்த அஞ்சலி, தாய்மொழி ரசிகர்களுக்கு கவர்ச்சியை வாரி வழங்குகிறார்.அதைப்பார்த்த சில தமிழ் இயக்குனர்கள், மறுபடியும் அவருக்கு அழைப்பு விடுத்தனர். அந்த நேரம் பார்த்து, ‘மதகஜராஜாவும் திரைக்கு வருவதற்கான சூழ்நிலைநிலவியதால், ‘அந்தப் படத்தின் ரிசல்ட்டைப் பார்த்துவிட்டு முடிவு சொல்கிறேன் என்று கூறிய அஞ்சலி, அப்படம் குறித்த நேரத்தில் ரிலீசாகாததால், மீண்டும் தமிழுக்கு வரும் எண்ணத்தை தள்ளிப்போட்டு விட்டார்.தற்போதைக்கு தமிழ், தெலுங்கில் உருவாகும், ‘முனி –3 கங்கா படத்தில் நடித்து வரும் அஞ்சலி, ஏற்கனவே தெலுங்கு சினிமாவில் மையம் கொண்டிருந்த சமந்தா, அமலா பாலின் கவனம், அக்கம் பக்கம் திரும்பியிருப்பதால், ஆந்திர சினிமாவில் ஆழக்காலூன்றும் அடுத்தக் கட்ட முயற்சியில் மும்முரமாகியுள்ளார்.

No comments:

Post a Comment