Wednesday, 23 October 2013

அதர்வாவுடன் இணைந்து சண்டைக் காட்சியில் நடித்த பிரியா ஆனந்த்

இரும்பு குதிரை படத்தில் அதர்வாவுடன் இணைந்து பிரியா ஆனந்த் சண்டை காட்சியில் நடித்துள்ளார்.
வாமனன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் பிரியா ஆனந்த். தொடர்ந்து 180, புகைப்படம், எதிர்நீச்சல் உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும் வை ராஜா வை, அரிமா நம்பி, இரும்பு குதிரை போன்ற படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான வணக்கம் சென்னை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் அவருக்கு ஒரு சண்டைக் காட்சி வைக்கப்பட்டிருந்தது. இதேபோல் தற்போது நடித்து வரும் இரும்பு குதிரை படத்திலும் பிரியா ஆனந்துக்கு சண்டைக் காட்சி உள்ளது. இந்த சண்டைக் காட்சியில் அவர், அதர்வாவுடன் சேர்ந்து நடித்திருக்கிறார்.
இதற்காக மலேசியாவைச் சேர்ந்த சண்டைப்பயிற்சி நிபுணர் சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். இவர்தான் அயன், சிங்கம்-2 படங்களுக்கும் பணியாற்றியவர்.

No comments:

Post a Comment