Wednesday, 23 October 2013

ஆர்யா, டாப்சி இடம் பெறும் காட்சிகளில் இளமை துள்ளல்: அஜீத் பாராட்டு

ஆரம்பம் படத்தில் ஆர்யா, டாப்சி இடம் பெறும் காட்சிகள் இளமை துள்ளலாக இருப்பதாக அஜீத் பாராட்டியுள்ளார்.
அஜீத் நடிப்பில் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவிருக்கும் படம்தான் ஆரம்பம். பில்லா வெற்றிக்குப் பிறகு அஜீத்-விஷ்ணுவர்தன் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஸ்ரீ சத்ய சாய் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் A .ரகுராம் தயாரித்திருக்கிறார். படத்தில் அஜீத்துடன் இணைந்து ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி உள்பட பலர் நடித்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு ஆரம்பம் படம் இம்மாதம் 31ஆம் தேதி உலகெங்கும் கோலாகலமாக  வெளியிடப்பட உள்ளது.
இதனிடையே அஜீத் குமாரின் வேண்டுகோளுக்கு இணங்க தயாரிப்பு நிறுவனம் ஒரு பிரத்யேக காட்சியை திரையிட்டனர். இதில் அவரது குடும்பத்தினர் , தயாரிப்பாளர் ஆகியோர் படம் பார்த்தனர். படத்தை மிகவும் ரசித்த  அஜீத் குமார் காட்சி முடிந்தவுடன் இயக்குனர் விஷ்ணுவர்தனை மனமார பாராட்டினார். பின்னர்  ஆர்யாவை தொலை பேசியில் நலம் விசாரித்ததோடு தனது பாராட்டையும் தெரிவித்தார்.
“ இந்த படத்தில் உங்களது  நடிப்பு மிகவும் பிரமாதம் . நான் மிகவும் ரசித்து பார்த்தேன் .திரையில் நீங்கள் டாப்சியுடன் தோன்றும் காட்சிகள் இளமை, அழகு …எல்லோரையும் கவரும் வண்ணம் உள்ளது.  இந்த படம் உங்களை நிச்சயம் ஒரு புதிய உயரத்துக்கு கூட்டிச் செல்லும் , தொடர்ந்து வெற்றி படங்களை குவித்து வரும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ‘  என கூறினார் .
பதிலுக்கு ஆர்யாவும் ‘ இந்த பாராட்டு   என்னை ஊக்குவிக்கிறது. உங்களுடன் பணிபுரியும் வாய்ப்பு எப்போது கிடைத்தாலும் நிச்சயம் நடிக்க வருவேன் ‘ என நெகிழ்ச்சியுடன் கூறினார் .
இவர்களின் உரையாடலை கேட்டு ரசித்த நிர்வாக தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், இந்த பரஸ்பர மரியாதை தமிழ் திரை உலகில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும்   என கூறினார் .

No comments:

Post a Comment