Thursday, 24 October 2013

வாய் மூடி பேசும் நஸ்ரியா நஸீம்!

நஸ்ரியா நஸீம் என்ற பெயரைக் கேட்டாலே சீற்றத்துடன் திரும்புகிறது கோடம்பாக்கம். நய்யாண்டி திரைப்படத்திற்கு நஸ்ரியாவால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்குப் பிறகு தமிழில் யாரும் நஸ்ரியாவை வைத்து படம் எடுக்க முன்வரவில்லை.

நஸ்ரியா ஜீவாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கவிருந்த திரைப்படத்திலிருந்தும் கழற்றிவிடப்பட்டார். நஸ்ரியா மறுபடியும் மலையாளத்துக்கே சென்றுவிடுவார் என்று பேசப்பட்டு வந்த நிலையில் மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டியின் மகன் டல்கூர் சல்மானுடன் ‘வாய் மூடி பேசவும்’ என்ற திரைப்படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மலையாளத்தில் ‘சலாலா மொபைல்’ என்ற பெயரில் உருவாகியுள்ள திரைப்படம் தான் தமிழில் ’வாய் மூடி பேசவும்’ என்ற பெயரில் வெளியாகிறதாம். காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தின் இயக்குனர் பாலாஜி மோகன் தான் இத்திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி படப்பிடிப்பை முடித்துவிட்ட படக்குழு கடைசி கட்ட பணிகளை கவனித்துவருகிறதாம்.

தமிழில் அனிருத் இசையமைப்பதாக ஒரு தகவல் நிலவிவந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை. நஸ்ரியா நஸீம் தமிழில் இதுவரை நடித்த நேரம், ராஜா ராணி, நய்யாண்டி திரைப்படங்கள் மாதிரி ‘வாய் மூடி பேசவும்’ திரைப்படமும் ரொமாண்டிக காமெடி சப்ஜெக்ட் கொண்ட திரைப்படமாம். 

No comments:

Post a Comment