Thursday, 24 October 2013

எவ்ளோ கொடுத்தாலும் தாங்குறீங்க... தனுஷ்!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘அனேகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழு வேகத்துடன் நடந்துவருகிறது. மாற்றான் எதிர்பார்த்த வெற்றியைத் தராததால் ‘அனேகன்’ திரைப்படத்தில் மிகுந்த ஈடுபாடுடன் பணியாற்றிவருகிறார் கே.வி.ஆனந்த்.

அனேகன் திரைபப்டத்தில் இதுவரை நடிக்காத ஒரு புது கதாபாத்திரத்தில் நடித்துவரும் தனுஷ், அதிரடியான சண்டைக் காட்சிகளிலும் நடிக்கிறாராம். அனேகன் திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் கனல் கண்ணன் தனது டுவிட்டர் வலைதளத்தில் “ தனுஷ் சாருக்கு மிக்க நன்றி. நீங்க கொழந்தை மாதிரி சார். ஃபைட்ல எவ்வளோ கொடுத்தாலும் தாங்குறீங்க... குழந்தை இதயம். இரும்பு உடல்” என்று கூறியிருக்கிறார்.

பாலிவுட்டில் ஒரே ஒரு படம்(Issaq) நடித்த அமைரா டஸ்டர் தனுஷுக்கு ஜோடியாக இத்திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். 

No comments:

Post a Comment