Monday, 21 October 2013

சம்பளம் வேண்டாம் பங்குகொடு... சிலுப்பித் திரியும் சிவகார்த்திகேயன்...

வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ வசூல் சிவகார்த்திகேயனை வாய்பிளக்க வைத்து இருக்கிறது.
அசந்துபோன தயாரிப்பாளர் மதன் ‘க்யூ7’ என்கிற விலைஉயர்ந்த வெளிநாட்டுக் காரை சிவாவுக்கு பரிசாக கொடுத்து இருக்கிறார்.
அதுமட்டுமல்ல இருவரும் இணைந்து காந்தி - இர்வின் ஒப்பந்தம் போட்டுள்ளனர். அதாவது சிவா நடிக்கும் படத்தின் பிசினஸ் 18கோடியைத் தாண்டுகிறது.
அதனால், இனிமேல் சம்பளம் பேரம் பேசாமல் பிசினஸில் கிடைக்கும் லாபத்தில் பெரும்பகுதியை தனக்கு ஒதுக்கித்தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் காரியத்தில் இறங்கி இருக்கிறார், சிவகார்த்திகேயன்.
எஸ்கேப் ஆர்டிஸ்ட் தயாரிப்பில் வருடத்திற்கு ஒரு படத்திலாவது சிவகார்த்திகேயன் நடிப்பாராம்!

No comments:

Post a Comment