Monday, 21 October 2013

டிசம்பரில் ரிலீஸாகிறதா வாலு?

அறிமுக இயக்குநர் விஜய் சந்தர் இயக்கும் 'வாலு' படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார்.
இதில் சந்தானம் , வி.டி.வி கணேஷ், பிரம்மானந்தம், மந்த்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
கடந்த ஆண்டு தீபாவளிக்கே வர வேண்டிய படம் வாலு. அதற்காக டீஸர் கூட வெளியிட்டனர். ஆனால், ஷூட்டிங்கே இன்னும் முடிந்தபாடில்லை.
'போடாபோடி' ரிலீஸாகி ஒரு வருடம் ஆகப்போகிறது. இந்நிலையில், 'வாலு' படத்தை  விரைவில் ரிலீஸ் செய்ய வேண்டுமென்று தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கிறார் சிம்பு.
சமீபத்தில் பெரம்பூர் பின்னிமில்லில் 'வாலு' படத்துக்காக ஒரு பாடல் காட்சியை எடுத்தனர்.
அதுபோக, இன்னும் சில பாடல்களும், சிறிய அளவிலான வசனப் பகுதிகளும் மட்டுமே எடுக்கப்பட வேண்டி இருக்கிறதாம்.
விரைவில் இரண்டு பாடல்களைப் படமாக்க வெளிநாடு கிளம்புகிறார்களாம். அதை முடித்த பின்னர் 2014 ஆரம்பத்திலேயே படத்தை வெளியிடவேண்டும் என்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறாராம் சிம்பு.

'வாலு' அநேகமாக டிசம்பரில் ரிலீஸ் ஆகலாம் என்கிறார்கள். டிசம்பரில் ரிலீஸ் ஆகுமா? அல்லது பொங்கல் ரேஸில் களத்தில் குதிக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

No comments:

Post a Comment