ஆரம்பம்’ படத்துக்காக முதலில் ஆர்யாவுக்கு நான்கு கோடி சம்பளம் பேசப்பட்டது. அதன்பின் தனக்கு நெகட்டிவ் ரோல் என்று சொல்லி, ஐந்தரை கோடி டிமாண்ட் செய்ய, நான்கரை கோடி தரப்பட்டது. ‘ஆரம்பம்’ படத்தின் டப்பிங் வேலைகள் நடந்தபோது ரத்னத்திடம் பணப்பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால், படம் பிசினஸ் ஆனபிறகு ஆர்யாவுக்கு ஒரு கோடி தருவதாக ரத்னம் சொன்னார்.
ஒரு கோடியை தந்தால்தான் டப்பிங் பேசுவேன் என்று ஆர்யா அடம்பிடித்தார். வேறு வழியில்லாமல், பணம் ஏற்பாடு செய்து ரத்னம் கொடுத்த பிறகுதான், டப்பிங் குரல் கொடுத்தார் ஆர்யா.
அந்தப் பணத்தை அப்படியே ரியல் எஸ்டேட் பிசினஸில் முதலீடாகப் போடுகிறார் ஆர்யா!
கேரளாவில் கொச்சின் அருகில் இருக்கும் இடங்களுக்கு கிராக்கி ஜாஸ்தியாம். ஆறு மாசத்துக்கு ஒரு கோடிக்கு வாங்கிய நிலம் இப்போது நான்கு கோடிக்கு விலை போகிறதாம்.
அதனால் தமிழ்நாட்டில் சம்பாதிக்கும் பணத்தை கொச்சினில் முதலீடு செய்கிறார்.
No comments:
Post a Comment