அஜீத், ஒளிப்பதிவாளர்களுக்கு பிடித்த ஹீரோ என்கிறார் ஆரமபம் படத்தின் ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ். அவர் மேலும் கூறியிருப்பதாவது: நாணயம், நீதானே என் பொன் வசந்தம், வாகை சூடவா படங்கள் தனித்தனியான கலர் கொண்ட படங்கள். அதன் ஒளிப்பதிவில் இருந்து மாறுபட்ட வேலை ஆரம்பம் படத்தின் ஒளிப்பதிவு. ஒரு ஆக்ஷன் படத்துக்கு ஒளிப்பதிவு செய்வது கடினமான வேலை. ஆனால் அஜீத் மாதிரி ஹீரோவாடு வேலை செய்வது எளிமையானது. காரணம் அவருக்கு கேமரா பற்றிய எல்லா டெக்னிக்கும் தெரியும். ஒளிப்பதிவாளர் என்ன நினைக்கிறாரோ அதனை செய்து விடுவார். அவர் ஒளிப்பதிவாளர்களின் ஹீரோ என்றால் அது மிகையில்லை. ஆரம்பம் படத்தின் ரிஸ்கான காட்சிகளில் கூட டூப்போட மறுத்து விட்டார். 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ஒரு காரில் 7 நிமிடங்கள் அவர் பேலட்டில் அமர்ந்து நடித்தது மறக்க முடியாத அனுபவம். அப்போது நடந்த விபத்தைகூட பொருட்படுத்தாமல் மறுநாளும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு முதல் ஆளாக வந்தார்.
அஜீத் சார் ஒவ்வொரு ஷாட் முடிந்ததும் பாராட்டி விடுவார். அது ஒளிப்பதிவாளருக்கு உற்சாகத்தை கொடுக்கும். கடமை முடிந்தது என்ற கிளம்ப மாட்டார். எடுத்த காட்சியை மானிட்டரில் பார்த்து பாராட்டிவிட்டுத்தான் செல்வார். இப்போது படம் முடிந்து விட்டாலும் அடுத்து அவருடன் பணியாற்றும் வாய்ப்பை எதிபார்த்துக் கொண்டிருக்கிறேன்.
இவ்வாறு ஓம்பிரகாஷ் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment