Sunday, 20 October 2013

இயக்குனர் ஆசையில் சினிமா வாரிசுகள்



சென்னை : பிரபல நடிகர், நடிகைகளின் வாரிசுகள் படங்களில் நடித்துக் கொண்டிருக்கின்றனர். டைரக்ஷன் துறையிலும் பல வாரிசுகள் ஈடுபட்டுள்ளனர். இப்போது இன்னும் அதிகமாக படங்கள் இயக்க சினிமா வாரிசுகள் வந்து கொண்டிருக்கின்றனர். ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ், ‘3’ படத்தை இயக்கினார். இப்போது ‘வை ராஜா வை’ படத்தை இயக்குகிறார். இளைய மகள் சவுந்தர்யா, ‘கோச்சடையான்’ படத்தை இயக்குகிறார். கமலின் இளைய மகள் அக்ஷரா இந்தி இயக்குனர் ஒருவரிடம் உதவியாளராகப் பணியாற்றியுள்ளார்.

கங்கை அமரனின் மூத்த மகன் வெங்கட் பிரபு, படங்கள் இயக்கி வருகிறார். பாரதிராஜா மகன் மனோஜ் கே.பாரதி, ‘டப்பா மோகனுக்கு கல்யாணம்’ என்ற படத்தை இயக்க உள்ளார். மணிவண்ணன் மகன் ரகுமணிவண்ணன், ‘நூறாவது நாள்’ படத்தை ரீமேக் செய்து இயக்க உள்ளார். தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் இளைய மகன் விஜய், படங்கள் இயக்குகிறார். மூத்த மகன் உதயா, ‘காரைக்குடி பைனா ன்ஸ்’ என்ற படத்தை இயக்க ஆயத்தமாகி வருகிறார்.

தயாரிப்பாளர் ‘பட்டியல்’ சேகரின் மூத்த மகன் விஷ்ணுவர்தன், பல படங்களை இயக்கி உள்ளார். கலைப்புலி எஸ்.தாணு மகன் கலாபிரபு, ‘சக்கரகட்டி’ படத்தை இயக்கினார். மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன், ‘சச்சின்’ படத்தை இயக்கினார். ஜி.என்.ரங்கராஜனின் மகன் ஜி.என்.ஆர்.குமரவேலன் சில படங்கள் இயக்கியுள்ளார். ஏ.எம்.ரத்னத்தின் மூத்த மகன் ஏ.எம்.ஜோதி கிருஷ்ணா படங்கள் இயக்கியுள்ளார்.

டி.ராஜேந்தரின் மகன் சிம்பு, ‘வல்லவன்’ படத்தை இயக்கி நடித்தார். தயாரிப்பாளர் ஜெயக்குமாரின் மூத்த மகன் சிவா, தெலுங்கு மற்றும் தமிழில் படம் இயக்குகிறார். ‘சிறுத்தை’யை தொடர்ந்து ‘வீரம்’ படத்தை இயக்கி வருகிறார். தயாரிப்பாளரும், எடிட்டருமான ஏ.மோகனின் மூத்த மகன் ஜெயம் ராஜா, பல ஹிட் படங்கள் கொடுத்துள்ளார். இளையராஜாவின் அண்ணனும்,

பாடலாசிரியருமான மறைந்த ஆர்.டி.பாஸ்கரின் மகன் ஜோ, ‘நாலு பேரும் ரொம்ம்ம்ப நல்லவங்க’ படத்தை இயக்கி வருகிறார். கே.பாக்யராஜின் மகன் சாந்தனு, விரைவில் இயக்குனராக அறிமுகமாகிறார். கவியரசு கண்ணதாசனின் மகன் அண்ணாதுரை கண்ணதாசன், ‘பஞ்சு’ என்ற படத்தை இயக்கினார். இன்னும் சில நட்சத்திர வாரிசுகளும் இயக்கம், எடிட்டிங், ஒளிப்பதிவு, ஆர்ட் டைரக்ஷன், தயாரிப்பு போன்ற பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.





No comments:

Post a Comment