
இப்படி ஒரு அண்ணன் தம்பியா? என்று ஆச்சர்யப் பட வைக்கிறார்கள் சூர்யாவும், கார்த்தியும்.சினிமாவில் இருப்பவர்கள் கூட வாயாரப் புகழும் அளவுக்கு அன்பை வளர்க்கிறார்கள்.
உங்களுக்கும் அண்ணனுக்கும் சண்டையே வந்ததில்லையா? என்று கார்த்தியிடம் கேட்டால், சின்னதாய் ஒரு பிளாஷ்பேக் ஓட்டினார்.
''சிறு வயதில் எனக்கும், சூர்யாவுக்கும் ஆகவே ஆகாது. இவன் எல்லாம் எனக்கு அண்ணனா? ஏன்டா எனக்கு இப்படி ஒரு அண்ணன் இருக்கான்னு நினைப்பேன். எங்களுக்குள் அடிக்கடி சண்டை வரும்.
நான் குண்டாக இருப்பேன். ஆனாலும், சண்டையில் நான் தோற்று விடுவேன். அண்ணன் அவ்வளவு வேகம். என் சைக்கிளை, பைக்கை எடுத்து ஓட்டினால் எனக்குப் பிடிக்காது. ஆனால், அண்ணன் ஒன்றையும் விடுவதில்லை.
என் சட்டையை விட்டு வைப்பதும் இல்லை. என் சட்டையை அண்ணன் போடலாம். அவன் சட்டை எனக்கு சிறியதாக இருக்கும். இருவரும் சேர்வது புரூஸ்லீ, ஜெட்லீ படம் பார்க்க மட்டும்தான்.
நான் அமெரிக்கா சென்று படித்து விட்டு ஊர் திரும்பியபோது அவர் நடிகராக வளர்ந்து இருந்தார். பருத்திவீரன் முடித்ததும் எனக்கு கார் வாங்கி கொடுத்தார். இப்படி ஒரு அண்ணன் கிடைச்சது நான் செய்த அதிர்ஷ்டம்'' என்கிறார் கார்த்தி.
No comments:
Post a Comment