Monday, 21 October 2013

ரசிகர்களுக்கு அஜீத் வழங்கும் தீபாவளி போனஸ் !

அஜீத்-வெங்கட்பிரபு கூட்டணியில் வெளியான ஒரு சூப்பர் ஹிட் படம் மங்காத்தா. அதனால், நீண்ட நாளைக்குப்பிறகு வெற்றியை சந்தித்த அஜீத், முடியை கோதிவிட்டு காலறை தூக்கி விடத் தொடங்கினார்.
ஆனால் அதற்கடுத்து அவர் நடித்த பில்லா-2 மீண்டும் படுத்துக்கொள்ளவே, தீபாவளிக்கு திரைக்கு வரத்தயாராக இருக்கும் ஆரம்பம் படத்தில் மங்காத்தா ஆட்டம் ஒன்றும் போட்டுள்ளாராம் அஜீத்.
மங்காத்தா படத்தில் தனி ஹீரோயிசம் என்பதை கடந்து தன்னுடன் அர்ஜூன் மற்றும் சில இளவட்ட நடிகர்களையும் கூட்டணி சேர்த்துக்கொண்டு நடித்த அஜீத், கிட்டத்தட்ட நெகடீவ் ஹீரோவாகவே நடித்திருநதார்.
நானும் எத்தனை நாளைக்குத்தான் நல்லவனாவே நடிக்கிறது. ரொம்ப போரா இருக்கு என்று சொல்லிக்கொண்டு மங்காத்தா ஆட்டமாடியிருந்தார்.
அந்த நடிப்பை அஜீத் ரசிகர்கள் வெகுவாக ரசித்தார்கள். அதனால், ஆரம்பம் படத்திலும் கிட்டத்தட்ட மங்காத்தா கெட்டப்பில் நரைமுடியுடன் நடித்திருக்கும் அஜீத், ஒரே வேடம் என்றாலும், ஒரு கட்டத்தில் நெகடீவ் பாதையிலும் நடக்கிறாராம்.
அப்போது மங்காத்தா படத்தில் ஆடியது போன்று ஒரு அதிரடி ஆட்டமும் ஆடுகிறாராம். இந்த பாடல் தனது ரசிகர்களுக்கு தீபாவளி போனசாக இருக்கும் என்றும் கருதுகிறாராம் அஜீத்.

No comments:

Post a Comment