கோச்சடையானில் ரஜினியின் ருத்ர தாண்டவ நடன காட்சி இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ரஜினியே கஷ்டப்பட்டு பரத நாட்டியம் ஆடி உள்ளார். சிவபெருமானின் ருத்ர தாண்டவம் போல் இக்காட்சியை எடுத்துள்ளார்கள்.கிராபிக்ஸ், பின்னணி இசையில் இந்த நடன காட்சி பிரமாதமாக வந்துள்ளதாகவும் ரசிகர்களை மிகவும் கவரும் என்றும் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். ரஜினி கால், கைகளை உயர்த்தியபடி நிற்பது போல் வெளியான ஸ்டில்கள் அந்த பரத நாட்டிய படப்பிடிப்பில் எடுக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது. கோச்சடையானில் ரஜினி தந்தை மகன் என இருவேடங்களில் வருகிறார்.
நாயகியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். சரக்குமார், ஆதி, நாசர், ஷோபனா போன்றோரும் நடித்துள்ளனர். ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கியுள்ளார். ஹாலிவுட் ஸ்டுடியோக்களில் இறுதிகட்ட பணிகள் நடக்கின்றன. ரஜினியின் பிறந்த நாளில் கோச்சடையான் படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது.
No comments:
Post a Comment