ஒரே சினிமாவை தென்னிந்தியா முழுக்க கூட ரிலீஸ் செய்யலாம் என்கிற அளவுக்கு ரசிகர்களின் மனசு விசாலமாகிவிட்டது. அதுவும் நமது கோடம்பாக்கத்து ஹீரோக்களுக்கு மற்றவர்களுக்கு கூட இல்லாதளவுக்கு லக்கி பிரைஸ். முன்பெல்லாம் மம்முட்டி, மோகன்லால், நாகார்ஜுனா, நாகேஸ்வரராவ் போன்ற ஹீரோக்களின் படங்கள் தமிழ்நாட்டிலும் பட்டையை கிளப்பும். இப்போது அதன் அளவு முற்றிலும் குறைந்துவிட்டது.ஆனால் நமது ஹீரோக்கள் நடித்த பல படங்களை ஆந்திராவிலும், பெங்களூருவிலும், கேரளாவிலும் அப்படியே வெளியிட்டு பணத்தை அள்ளக் கூடிய வாய்ப்புகள் பெருகியிருக்கிறது. ஷங்கர், பாலா போன்ற இயக்குனர்களின் படங்களில் யார் நடித்தாலும் அவர்களை கொண்டாட ஒரு கூட்டமே வெளி மாநிலங்களில் காத்திருக்கிறது. இந்த சந்தோஷ தருணத்தில் தன்னை நேரடி தெலுங்கு படங்களில் நுழைத்துக் கொள்ள ஆசைப்படுகிறாராம் ஆர்யா. இப்போதெல்லாம் ஆர்யா வீட்டுக்கு தெலுங்கு பட இயக்குனர்களும் கதை சொல்ல வருவது அதிகரித்திருக்கிறதாம்.
No comments:
Post a Comment