அரசியல் புயலில் சிக்கி சின்னாபின்னாமான வைகை புயல் இரண்டு வருடத்துக்குப் பிறகு இப்போதான் கரையை கடந்து வந்திருக்கு. ரீ-என்ட்ரி ரொம்ப ஸ்டிராங்கா இருக்கணும்னு ரொம்ப நாள் வெயிட் பண்ணினாரு. வந்த காமெடி கேரக்டரையெல்லாம் உதறி தள்ளிட்டு ஹீரோவா நடிச்சு ரீ-என்ட்ரியை பவர்புல்லா தொடங்கணும்னு பிளான் பண்ணி பண்ணுற படம்தான் "ஜெகஜா புஜபல தெனாலிராமன்". ஏற்கெனவே ஹிட் அடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி பார்முலாவை பிடித்துக் கொண்டு வருகிறார் வடிவேலு.ஏஜிஎஸ் எண்டர்டயின்மெண்ட் படத்துக்கு கணிசமாக 25 கோடியை ஒதுக்கி தயாரிக்கிறது. ஆர்ட் டைரக்டர் பிரபாகர் போட்டிருக்கும் பிரமாண்ட செட்டுகளிலேயே இதுவரை 60 சதவிகித படப்பிடிப்பு முடிந்து விட்டது. ஆரம்பத்தில் நியமிக்கப்பட்ட சில கேமராமேன்கள் பிரச்னை பண்ணியதை தவிர படத்துக்கு வேறு சிக்கல் எதுவும் இல்லை. தற்போது ராம்நாத் ஷெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். படம் ரிலீசப்போ எந்த பிரச்னையும் இருக்ககூடாதுன்னு மேலிடத்தில் கைப்புள்ள ரேன்ஞ்சுல பேசி என்ஓசி வாங்கி தயாரிப்பாளர் கையில கொடுத்துட்டாரு படித்துறை பாண்டி.
No comments:
Post a Comment