Thursday, 24 October 2013

சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் ரன்பீர், வித்யா பாலனுக்கு விருது


மக்காவ் : சர்வதேச இந்திய திரைப்பட விழா(இஃபா)வில் சிறந்த நடிகர், நடிகையாக ரன்பீர் கபூரும், வித்யா பாலனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  சர்வதேச இந்திய திரைப்பட விழா இந்த வருடம் சீனாவில் உள்ள மக்காவில் மூன்று நாட்களாக நடந்தது. இதில் ஸ்ரீதேவி, பிரபுதேவா, மாதுரி தீக்ஷித், தீபிகா படுகோன் பங்கேற்ற நடன நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக நடந்தன. இறுதி நாளான நேற்று அதிகாலை விருதுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் ‘பார்பி’ படத்தில் காது கேளாத, வாய்ப்பேச முடியாதவராக நடித்த ரன்பீர் கபூர் சிறந்த நடிகராகவும், ‘கஹானி’ படத்தில் கர்ப்பிணியாக நடித்த வித்யா பாலன் சிறந்த நடிகையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ‘பார்பி’ படம் சிறந்த கதை, இயக்கம், சிறந்த திரைப்படம், இசை ஆகிய பிரிவில் விருதுகளை பெற்றது. ரன்பீர் கபூரும், தீபிகா படுகோனும் சிறந்த ஜோடிக்கான விருதை பெற்றனர். ‘விக்கி டோனர்’ படத்தில் நடித்த யாமி கவுதம் புதுமுகத்துக்கான விருதை பெற்றார். ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தை இயக்கிய கவுரி ஷிண்டே அறிமுக இயக்குனருக்கான விருதை பெற்றார்.

No comments:

Post a Comment