.jpg)
தமிழ் சினிமாவில் கதாசிரியர்களுக்கு மதிப்பில்லை என்றார் இயக்குனர் ஜி.சேகரன். பார்த்திபன் கனவு படத்தை இயக்கிய கரு.பழனியப்பன் இயக்கும் புதிய படம் ஜன்னல் ஓரம். பார்த்திபன், விமல், விதார்த், பூர்ணா, மனிஷா யாதவ் நடிக்கின்றனர். முருகன் தயாரிக்கிறார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை நடந்தது. ஜமீன்கோட்டை, காவல் பூனைகள், குடும்ப சங்கிலி போன்ற படங்களை இயக்கிய கலைப்புலி ஜி.சேகரன் விழாவில் பேசியதாவது: தமிழ் சினிமாவை காக்கும் பொறுப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு இருக்கிறது. தற்போது அதன் தலைவராக தேர்வாகி இருக்கும் கேயார், தயாரிப்பாளர்களை காப்பாற்றும் நடவடிக்கைகளை எடுப்பார் என்று நம்புகிறேன். ஜன்னல் ஓரம் படத்தில் 3 ஹீரோக்கள் நடித்திருக்கின்றனர். இது ஆரோக்கியமான சூழல். முன்பெல்லாம் படத்தில் இயக்குனர்கள், நடிகர்கள் பெயர்களுக்கு இணையாக கதாசிரியர், எழுத்தாளர்கள் பெயரும் போடப்பட்டு வந்தது. இப்போது அந்த நிலையை காண முடியவில்லை. மலையாள திரையுலகில் இன்றைக்கும் திரை எழுத்தாளர்களுக்கு மரியாதை இருக்கிறது. மலையாள படமொன்றின் ரீமேக் உரிமையை வாங்க ஹீரோ திலீப்பை சந்திக்க சென்றோம். அது இரவு நேரம். அந்த நேரத்திலும் அப்படத்தின் கதை, திரைக்கதை ஆசிரியர் உடனிருந்தனர். அவர்கள் முன்னிலையில்தான் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்தளவுக்கு எழுத்தாளர்களுக்கு அங்கு இன்றைக்கும் மரியாதை இருக்கிறது. அந்த நிலை தமிழ் சினிமாவில் இல்லை. இவ்வாறு ஜி.சேகரன் பேசினார். விழாவில் நடிகர்கள் சூர்யா, விஷால், இயக்குனர்கள் அமீர், சேரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.விழாவில் பார்த்திபன் பேசும்போது, இந்த விழாவுக்கு அனைவரையும் வேட்டி கட்டி வரும்படி தயாரிப்பாளர் எங்களிடம் கேட்டார். தயாரிப்பாளருக்காக வேட்டி கட்டி வந்தோம். அதேபோல் இன்று (நேற்று) மாலை வெளியான தமிழ் முரசு பத்திரிகையில், லிங்குசாமிக்காக சூர்யா தாடி வளர்க்கிறார் என்று தலைப்பு வெளியிட்டிருந்தார்கள். (இப்படி கூறியபடி தமிழ்முரசு பத்திரிகையை காட்டினார்). இதன் மூலம் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு ஹீரோக்கள் எவ்வளவு ஒத்துழைப்பு தருகிறார்கள் என்பது புரியும் என்றார். அப்போது கரவொலி எழுந்தது.
No comments:
Post a Comment