Sunday, 20 October 2013

கெளதம்மேனன் படத்திலிருந்து விலகினாலும் நட்பு தொடர்கிறது! -சூர்யா

சிங்கம்-2 படத்தையடுத்து கெளதம்மேனன் இயக்கயிருந்த துருவநட்சத்திரம் படத்தில் நடிக்கயிருந்தார் சூர்யா. அதனால் அப்படம் வெளியானதும் துருவநட்சத்திரத்திற்கான பூஜையும் கெளதம்மேனனின் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆனால், அவர் சொன்ன கதை சூர்யாவுக்கு பிடிக்கவில்லை.
அதனால் கதையில் மாற்றம் செய்யச்சொன்னார். அதையடுத்து தனது சகாக்களுடன் சில மாதங்களாக புதிய கதையொன்றை ரெடி பண்ணினார் கெளதம். ஆனால், அதிலும் சூர்யாவுக்கு திருப்தி இல்லை. அதனால், அதற்கடுத்து நடிக்கயிருந்த லிங்குசாமி படத்தில் நடிக்க தயாராகி விட்டார் சூர்யா. அடுத்த மாதம் படப்பிடிப்பு நடைபெறவிருக்கும நிலையில், தற்போது தாடி வளர்த்துக்கொண்டிருககிறார்.
இந்த நிலையில், கெளதம்மேனன் படத்தில் அவர் நடிக்காததால் அவர்களுக்கிடையே விரிசல் விழுந்திருப்பதாக செய்தி பரவியுள்ளது. ஆனால், அதை மறுக்கிறார் சூர்யா. கெளதம்மேனன் இயக்கத்தில் காக்க காக்க, வாரணம் ஆயிரம் படங்களில் நடித்திருக்கிறேன்.
அந்த வகையில் எங்களுக்கிடையே நல்லதொரு நட்பு உள்ளது. இப்போது அவர் படத்தில் நடிக்கவில்லை என்றாலும், அடுத்த ஆண்டு நடிப்பேன். மேலும், அவர் படத்தில் நடிக்காததால் எங்களது நட்பு முறியவில்லை. எப்போதும் போலவே நாங்கள் நண்பர்களாகவே இருக்கிறோம் என்கிறார்.

No comments:

Post a Comment