இயக்குனர் மகிழ்திருமேனி ‘தடையற தாக்க’ என்ற படத்தை அடுத்து, ஆர்யாவை வைத்து ஒரு படத்தை எடுப்பதற்கு ஸ்கிரிப்ட் தயார் செய்துள்ளார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. அனிருத் இசையமைக்கிறார்.
இந்த புதிய படத்தில் ஆர்யா ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசனை அணுகினர் இயக்குனர் மகிழ்திருமேனி. அவரிடம் கதையை கேட்ட ஸ்ருதி, மிகவும் திருப்தி அடைந்து படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வதாக கூறினார். ஆனால் அவர் நடிப்பதற்கு கேட்ட சம்பளத்தை கேட்டு அதிர்ச்சியடைந்தார் மகிழ்திருமேனி. அவர் கேட்ட தொகை, ஆர்யாவுக்கு பேசிய தொகையைவிட அதிகம் எனதுதான் அவரது அதிர்ச்சிக்கு காரணம். ஆனாலும் ஸ்ருதிதான் அந்த கேரக்டருக்கு சரியாக இருப்பார் என இயக்குனர் கருதுவதால், அவர் கேட்கும் தொகையை கொடுக்க, தயாரிப்பாளரும் சம்மதித்துவிட்டார்.ஆர்யா இப்போது ஜனநாதன் இயக்கும் ‘புறம்போக்கு’ படத்தில் நடித்து வருகிறார். ஸ்ருதிஹாசன் இந்தியில் இரண்டு படங்களிலும் தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இப்படங்களை முடித்துவிட்டு இருவரும் மகிழ்திருமேனி படத்துக்கு வருகிறார்கள். இந்த படம் தமிழில் தனக்கு நிலையான இடத்தை ஏற்படுத்தி தரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் ஸ்ருதி
No comments:
Post a Comment