‘ஐ’ படத்தில் விக்ரம்–எமி ஜாக்சன் சம்பந்தப்பட்ட ஒரு பாடல் காட்சியை பூந்தோட்டம் ஒன்றில் எடுக்க விரும்பினார், டைரக்டர் ஷங்கர். இதற்கான அவர் கற்பனை விரிந்தபோது அது பிரமாண்ட பூந்தோட்டமாய் வ(ளர்)ந்து நிற்க, அந்த மாதிரி பூந்தோட்டம் வேண்டும் என்று அவர் டிசைன் பண்ணிக் காட்ட, தேடினார்கள், தேடினார்கள், அப்படியொரு பூந்தோட்டம் மட்டும் கண்ணில் படவே இல்லை.இல்லாவிட்டால் உருவாக்குவது தானே நம்மவர்கள் வேலை! இப்போது கொடைக்கானலில் புதுசாய் பூச்செடிகள் நட்டு இதற்காக ஒரு பூந்தோட்டத்தையே வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
நண்பன்' படத்தினை அடுத்து ஷங்கரின் அடுத்த படம் என்ன என்பது குறித்து பல்வேறு செய்திகள் வலம் வந்த வண்ணம் இருந்தன. தற்போது தனது அடுத்த படத்தினை அறிவித்து இருக்கிறார் ஷங்கர்.
'அந்நியன்' கூட்டணி மீண்டும் இணைகிறது. ஆஸ்கர் பிலிம்ஸ், ஷங்கர், விக்ரம் இணையும் இப்படத்திற்கு தலைப்பு 'ஐ'.
முதல் முறையாக ஷங்கர் படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். விக்ரம் நாயகனாக நடிக்க, சமந்தா நாயகியாக நடிக்க இருக்கிறார். சந்தானம், சுரேஷ் கோபி ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள்.
இப்படத்தில் முதன் முறையாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகனும், பிரபுவின் அண்ணனுமான 'சிவாஜி பிலிம்ஸ்' ராம்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
'ஐ' என்றால் அழகு, அரசன், ஆசான், வியப்பு, மேன்மை மற்றும் இளி என்னும் இசையின் எழுத்து, எசமானன், நுண்மை, அம்பு, ஐயம் என பல பொருள்கள் உள்ளது.
இப்படத்தின் முக்கிய அம்சங்கள் :
'மென் இன் பிளாக்' சீரிஸ் படங்களில் பணிபுரிந்த மேரி வாட் இப்படத்தின் விசேஷமான உடைகளை வடிவமைக்கிறார்.
சண்டைப்பயிற்சியினை அனல் அரசுவும், சைனாவை சேர்ந்த பீட்டர் மிங்கும் அமைக்கிறார்கள்.
'ஹாரி பாட்டர்' சீரிஸ் படங்களில் பணிபுரிந்த ஆஸ்திரிலேயாவின் 'ரைசிங் சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இப்படத்தில் விஷுவல் எஃபக்ட்ஸ் பகுதிகளை அமைக்கிறது.
ஸ்ரீனிவாஸ் மோகன் விஷுவல் எஃபக்ட்ஸ் சூப்பர்வைசராக பணிபுரிய, இன்னும் பல ஹாலிவுட் தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த டென்ஷியன்களும் இப்படத்தில் பணிபுரிய இருக்கிறார்கள்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் கபிலன் எழுதி விஜய்பிரகாஷ் பாடிய பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.
இப்படத்திற்கு வசனம் எழுதுவதன் மூலம் இரட்டை எழுத்தாளர்கள் சுபா முதல் முறையாக ஷங்கருடன் இணைகிறார்கள்.
இது ஒரு அரசியல் படம் அல்ல. இது ஒரு ரொமான்டிக் திரில்லர் படம்.
thanks thina thanthi...
No comments:
Post a Comment