Wednesday, 23 October 2013

காஜல் அகர்வால் மீது தயாரிப்பாளர் பரபரப்பு புகார்


காஜல் அகர்வால், சரண்யா மோகன் மீது தயாரிப்பாளர் புகார் கூறினார். அமல், சரண்யா மோகன் ஜோடியாக நடிக்கும் படம் கோலாகலம். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் ஹீரோயின் சரண்யா மோகன் பங்கேற்கவில்லை. தொடர்ச்சியாக ஹீரோயின்கள் ஆடியோ விழாவை புறக்கணிப்பதற்கு விழாவில் பங்கேற்ற திரையுலகினர் கண்டனம் தெரிவித்தனர். கார்த்தி, காஜல் அகர்வால் நடித்த ஆல் இன் ஆல் அழகுராஜா பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசும்போது, கோலாகலம் பட ஆடியோ ரிலீசுக்கு வருமாறு ஹீரோயின் சரண்யா மோகனை கூப்பிட்டும் வரவில்லை என்று தயாரிப்பாளர் என்னிடம் கூறினார். இது மிகப் பெரிய தவறு. பட விழாக்களுக்கு நடிகைகள் கண்டிப்பாக வரவேண்டும். நான் தயாரித்த ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு அதில் நடித்த ஹீரோயின் காஜல் அகர்வாலை அழைத்தும் அவர் வரவில்லை. ஹீரோயினின் மேனேஜர்தான் அவரை வரவிடாமல் தடுத்துவிட்டாராம். இதுபற்றி மேனேஜரிடம் கேட்டபோது விளம்பரங்களில் பங்கேற்பது நடிகைகளின் வேலை இல்லை என்று கூறிவிட்டார். படங்களின் ரிலீசுக்கு விளம்பரம் முக்கியம். இதுபோன்ற விழாக்களில் நடிகைகள் பங்கேற்றால்தான் படம் மக்களை சென்றடையும் என்றார். இதேபோல் விழாவில் பங்கேற்ற டைரக்டர் சங்க தலைவர் விக்ரமன், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார் உள்ளிட்ட நிர்வாகிகளும் ஹீரோயின்கள் பட விழாக்களில் பங்கேற்க வேண்டும்

No comments:

Post a Comment