சிறிய சிறிய வேடங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி கார்த்திக் சுப்புராஜின் பீட்சா படத்திலும்,நளன் குமரசாமியின் சூது கவ்வும் என்ற படத்திலும்,பாலாஜி தரணிதரனின் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்திலும், இதற்காகதானே ஆசைபட்டாய் பாலகுமரா படங்களிலும் கதாநாயகனாக நடித்தார் இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் வணிகரீதியாக பெருவெற்றி பெற்றன. தற்போது, பண்ணையாரும் பத்மினியும்,ரம்மி போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்..‘மார்க்கெட்’ அந்தஸ்து உயர்ந்ததை தொடர்ந்து இப்போது அவர் தனது சம்பளத்தை ரூ. 3 கோடியாக உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியில் ஷாருக்கான் நடிப்பில் பெரும் வெற்றி கண்ட ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தை இயக்கிய ரோஹித் கபூர், அடுத்து ‘சூது கவ்வும்’ படத்தை இந்தியில் ரீமேக்குகிறார். இம்ரான்கான்–ஸ்ரதா கபூர் நடிக்கிறார்கள்.
விஜய்சேதுபதி நடிக்கும் எல்லா படங்களுமே வித்தியாசமான கதைக்கருவை கொண்டவை. அதோடு அவை வெற்றியும் பெற்று விடுவதால் விஜய்சேதுபதிக்கு கதை சொல்லும் இயக்குனர்கள் மீதும் ஒரு கண் வைத்திருக்கிறார்கள்.
இதில் ஆச்சரியமான இன்னொரு விஷயத்தையும் சொல்லியே ஆக வேண்டும். இவற்றில் பலவும் முதலில் பிரபல ஹீரோக்களுக்கு சொல்லப்பட்டு அவர்கள் நிராகரித்து அதன்பிறகு தான் விஜய் சேதுபதியை வந்தடைந்தவை. என்பது குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment