Tuesday, 5 November 2013

முத்தக் காட்சிக்கு ரகசியா மறுப்பா?


சென்னை : மகேஷ், ஆருஷி, கஞ்சா கருப்பு, ரகசியா நடிக்கும் படம், ‘வேல்முருகன் போர்வெல்ஸ்‘. எம்.பி.கோபி இயக்குகிறார். இதன் ஷூட்டிங்கில் ரகசியாவை கஞ்சா கருப்பு முத்தமிட்டதாகவும் கோபத்தில் படப்பிடிப்பில் இருந்து ரகசியா வெளியேறியதாகவும் தகவல் வெளியானது.

இதுபற்றி இயக்குனர் கோபி கூறியதாவது: அதில் பாதி தகவல்தான் உண்மை. கருப்புக்கு முத்தம் கொடுப்பது போன்ற காட்சி இருக்கிறது. நடிக்க வேண்டும் என்று ரகசியாவிடம் சொன்னேன். அதற்கு மறுத்துவிட்டார். பிறகு அவரது மானேஜரை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரவழைத்தார். ‘இந்தக் காட்சிப் பற்றி முதலிலேயே ஏன் சொல்லவில்லை?‘ என்று கேட்டார். இதனால் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து நெற்றியில் முத்தமிடுவது போல் காட்சியை மாற்றி எடுத்தோம். ஷூட்டிங் முடிந்துவிட்டது. அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

No comments:

Post a Comment