Monday, 4 November 2013

விஜய் பட விளம்பரம் மோகன்லால் ரசிகர்கள் ஷாக்

ஜில்லா பட விளம்பரத்தை பார்த்து மோகன்லால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விஜய் நடித்து வெளியாக உள்ள படம் ஜில்லா. இதில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் நடித்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தீபாவளி தினத்தில் வெளியிடப்பட்டது. அதை பார்த்த மோகன் லால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பட விளம்பரத்தில் விஜய் பெயர் முதலிலும் 2வதாக மோகன்லால் பெயரும் இடம்பெற்றுள்ளதே அவர்களின் அதிர்ச்சிக்கு காரணம். கோலிவுட்டில் விஜய் முன்னணி ஹீரோவாக இருக்கலாம்.

ஆனால் மோகன்லால் சீனியர் நடிகர். அதுவும் தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர். நடிப்பிலும் ஜாம்பவான். அப்படிப்பட்டவரை எப்படி 2ம் இடத்துக்கு தள்ளலாம் என லால் ரசிகர்கள் பலர் கொதிப்படைந்துள்ளனர். இது தொடர்பாக இணையதளத்திலும் தங்கள் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். உன்னைப்போல் ஒருவன் படத்தில் கமல்ஹாசனுடன் மோகன்லால் நடித்தார். அதில் கமல் பெயர் முதலில் போட்டு லால் பெயரை இரண்டாவதாக போட்டதில் நியாயம் இருந்தது. ஆனால் ஜில்லாவில் அப்படி போடலாமா? கேரளாவில் இப்படம் ரிலீசானாலும் இப்படித்தான் விளம்பம் செய்வார்களா? என மல்லுவுட் ரசிகர்கள் கேட்கின்றனர்.



ஜில்லா பட விளம்பரத்தை பார்த்து மோகன்லால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விஜய் நடித்து வெளியாக உள்ள படம் ஜில்லா. இதில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் நடித்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தீபாவளி தினத்தில் வெளியிடப்பட்டது. அதை பார்த்த மோகன் லால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பட விளம்பரத்தில் விஜய் பெயர் முதலிலும் 2வதாக மோகன்லால் பெயரும் இடம்பெற்றுள்ளதே அவர்களின் அதிர்ச்சிக்கு காரணம். கோலிவுட்டில் விஜய் முன்னணி ஹீரோவாக இருக்கலாம்.

ஆனால் மோகன்லால் சீனியர் நடிகர். அதுவும் தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர். நடிப்பிலும் ஜாம்பவான். அப்படிப்பட்டவரை எப்படி 2ம் இடத்துக்கு தள்ளலாம் என லால் ரசிகர்கள் பலர் கொதிப்படைந்துள்ளனர். இது தொடர்பாக இணையதளத்திலும் தங்கள் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். உன்னைப்போல் ஒருவன் படத்தில் கமல்ஹாசனுடன் மோகன்லால் நடித்தார். அதில் கமல் பெயர் முதலில் போட்டு லால் பெயரை இரண்டாவதாக போட்டதில் நியாயம் இருந்தது. ஆனால் ஜில்லாவில் அப்படி போடலாமா? கேரளாவில் இப்படம் ரிலீசானாலும் இப்படித்தான் விளம்பம் செய்வார்களா? என மல்லுவுட் ரசிகர்கள் கேட்கின்றனர். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=11644&id1=3#sthash.HyLD5BDg.dpuf

No comments:

Post a Comment