மீண்டும் கவர்ச்சியாக நடிக்க நயன்தாரா முடிவு செய்துள்ளார். இதற்கு பரிசோதனை முயற்சியாக ஆரம்பம் படத்தில் ஒரு காட்சியில் இதுபோல் அவர் நடித்திருக்கிறார். பில்லா படத்தில் பிகினியில் நடித்து பல ஹீரோயின்களின் பிபியை எகிற வைத்தவர் நயன்தாரா. நடிப்பு, அழகு இருந்தாலும் கவர்ச்சியால் படுவேகமாக டாப் ஒன் இடத்துக்கு முன்னேறியவர். அந்த நேரத்தில்தான் காதலில் விழுந்தார். பிரபுதேவாவுடன் ஏற்பட்ட காதல் காரணமாக, இனி கவர்ச்சி வேடங்களில் நடிப்பதில்லை என முடிவு செய்தார். அந்த காதல் முறிந்த பிறகும் அதையே பாலிசியாக வைத்திருந்தார்.தெலுங்கில் சீதையாகவும் நடித்து பேமிலி சினிமா ரசிகர்களின் பேவரைட் ஆனார். இப்போது போட்டி அதிகரித்துவிட்டது. அதே சமயம் நயனும் வயது கடந்து வருகிறார். இந்த நேரத்தில் கவர்ச்சியாக நடித்தால்தான் போட்டியை சமாளிக்க முடியும் என அவர் முடிவு செய்துள்ளாராம். இதற்கு பரிசோதனை முயற்சியாக தீபாவளிக்கு வெளியான ஆரம்பம் படத்தில் ஒரு காட்சியில் படு கவர்ச்சியாகவும் படம் முழுக்க மாடர்ன் உடைகளிலும் அவர் நடித்திருந்தார். இதையே தொடரவும் அவர் முடிவு செய்துள்ளாராம். இந்நிலையில் ஆர்யாவுடன் நயன்தாரா நடித்த ராஜா ராணி தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது. இதில் நயன்தாராவையே நடிக்க வைக்கலாம் என்றும் படத்தில் இடம்பெறும் பிளாஷ்பேக் காட்சிகளில் அவரது கவர்ச்சியை பயன்படுத்தலாம் என்றும் ரீமேக் பட டீம் முடிவு செய்துள்ளதாம்.
No comments:
Post a Comment