சினிமாவில் எனக்கு பிடிக்காதது டான்ஸ்தான் என்றார் சமந்தா. நான் ஈ பட ஹீரோயின் சமந்தா அடுத்து லிங்குசாமி இயக்கும் படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க உள்ளார். டோலிவுட்டில் ஹீரோயின்களுக்குள் கடும்போட்டி நிலவுகிறது. சமந்தா நடிக்கவிருந்த ஒரு படத்தில் அவருக்கு பதிலாக தமன்னா நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். ஆனால் சமந்தா அதை கண்டுகொள்ளாமல் தமன்னாவை பாராட்டி இருக்கிறார். சமீபத்தில் சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது,படங்களில் டான்ஸ் எனக்கு பிடித்த பகுதி இல்லை. ஆனால் அனைத்து டான்ஸர்களையும் மிகவும் மதிக்கிறேன். அதிலும் குறிப்பாக என் டார்லிங் தமன்னாவின் நடனம் மிகவும் பிடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். பல படங்களில் பாடல் காட்சிகளில் அதிக டேக் வாங்குவார் சமந்தா. அதற்கு காரணம், டான்ஸ் மூவ்மென்ட்ஸ் அவருக்கு சரியாக வராததுதான். அதற்காகவே அவருக்கு அதிக மூவ்மென்ட்ஸ் இல்லாத டான்ஸ் காட்சியை இயக்குனர்கள் வைப்பார்கள்.
No comments:
Post a Comment